அண்ணன் கிட்ட உதவி கேட்ட தங்கை.. மறு நிமிடமே குளச்சல் லாட்ஜில் திருப்பம்.. கதிகலங்கிய கன்னியாகுமரி

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஒரு பிளஸ் 2 மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல், கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டுள்ளது.. உதவுவதாக நம்ப வைத்தவர்களே அடுத்தடுத்து அந்த மாணவியை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.. ஒரு கட்டத்தில் மது கொடுத்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது குளச்சலில்?

    Advertisement

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்த அந்த மாணவி, வீடியோக்கள், ரீல்ஸ் என தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

    Advertisement

    கன்னியாகுமரி மாணவி

    கடந்த வருடம் இவருக்கு தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது.

    அஜன் ஆசை வார்த்தைகளை நம்பிய மாணவி, அவருடன் பார்க், குளச்சல் பீச் என பல இடங்களுக்கும் சென்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜுக்கும் அஜன் மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் பழக்கம்

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மாணவியை தொடர்ந்து தன்னுடைய கன்ட்ரோலில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் வீடியோ வெளியே வந்துவிடும் என்ற பயத்தில் மாணவி பல முறை அஜனின் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

    Advertisement

    ஒரு கட்டத்தில் அஜனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்த மாணவி, வேம்பனூரைச் சேர்ந்த விவேக் (32) என்பவரிடம் நடந்த விஷயங்களை சொல்லி உதவி கேட்டுள்ளார்... இந்த விவேக், மாணவியின் பெரியப்பா மகன், அதாவது அண்ணன் உறவு முறையாகும்..

    ஆனால் தங்கை என்றும் பாராமல், உதவி கேட்டு வந்த மாணவியிடம் தனியாக பேசுவதும், அவரை தனியாக அழைப்பதுமாக இருந்துள்ளார்.. நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க தன்னுடனும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியிருக்கிறார்.. பிறகு மாணவியை வீட்டுக்கு அழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த உறவுமுறை அண்ணன்.

    Advertisement

    குளச்சல் லாட்ஜ்

    இந்த விவகாரம் விவேக்கின் நண்பரான குளச்சல் அருகே பரப்புவிளையைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவருக்கும் தெரியவந்துள்ளது. மாணவி ஏற்கனவே சிக்கலில் இருப்பதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த தினேஷ், வெளியூரில் இருக்கும் தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட்டுக்கு மாணவியை அழைத்து சென்று, மாணவிக்கு மது கொடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    இதன் பிறகு தினேஷின் நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவரும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இபபடியே கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை, மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து, தினேஷும் ஆன்றோ ஜெரிஷும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்..

    Advertisement

    மாயமான மாணவி

    இதனிடையே, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் பதறிப்போன பெற்றோர் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசாரும் மாணவி மாயமானதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு மாணவி வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோதுதான், இதுவரை நடந்த பல அதிர்ச்சி விஷயங்கள் வெளியில் வந்தன. கடைசியாக அப்பார்ட்மெண்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, தினேஷும் ஆன்றோ ஜெரிஷும் போதையில் இருந்தபோது, அங்கிருந்து தப்பி பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டதாக போலீசாரிடம் மாணவி கண்ணீருடன கூறினார்.

    Advertisement

    4 பேரை தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்

    இதையடுத்து மாணவி மாயமானதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு குளச்சல் மகளிர் போலீசார் சுமார் 3 வாரங்கள் ரகசியமாக விசாரணை நடத்தினர். முதலில் மாணவியின் காதலன் அஜன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வேம்பனூரைச் சேர்ந்த விவேக்கும், சென்னையில் தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷும் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய ஒரு பழக்கம், ஒரு மாணவியின் வாழ்க்கையையே இன்று சிதைத்து விட்டது.. சோஷியல் மீடியாவில் பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள், எப்படி பழகுகிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டிய நேரம் இது..!!!

    English Summary

    Cousin Brother Asked for Help? Kanyakumari Girl’s Story Took a Twist at a colachel Lodge.. What Happened Next?