முதலிரவு நடக்கல.. காலையில் கல்யாணம்.. சாயங்காலமே மாப்பிள்ளை காட்டிய ஷோ! கன்னியாகுமரி ஷாக்

  • கன்னியாகுமரி: 4 வருடங்களாக உருகி உருகி காதலித்துள்ளது ஒரு ஜோடி.. திருமணமும் நடந்தது.. ஆனால், அதே நாளில் நடந்த ஒரு சம்பவத்தால் புதுப்பெண் தனது கணவரைப் பிரிந்து அப்பா வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.. முதலிரவுகூட நடக்காத நிலையில், திருமணமான அன்றே இந்த ஜோடி பிரிந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரத்தைச் சேர்ந்தவர் 31 வயதான ராணுவ வீரர். இவர், குமரி - கேரள எல்லைப் பகுதியான பாறசாலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்..

    Advertisement

    கன்னியாகுமரி காதல் ஜோடி

    அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருந்தாளுநராக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுடைய காதலுக்கு ஆரம்பத்தில் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.. இருந்தாலும், காதலர்கள் 2 பேரும் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்..

    இதையடுத்து, கடைசியில் இரு வீட்டாரும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.. இதனால் காதலர்கள் 2 பேருக்கும் கடந்த திங்கட்கிழமை பாறசாலையில் திருமணம் நடைபெற்றது..

    நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தவர்களுக்குத் திருமணம் நடந்ததால், 2 வீட்டாரும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.. திருமணத்தை தொடர்ந்து மணமகன் வீட்டார், ரீத்தாபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.. உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..

    Advertisement

    மாமனார் - மருமகன் தகராறு

    ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம்கூட நீடிக்கவில்லை.. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது புதுமாப்பிள்ளை மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது..

    மாப்பிள்ளை தள்ளாடுவதை பார்த்து, பெண்ணின் அப்பா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாப்பிள்ளையிடமே கேட்டுள்ளார்.. இது தகராறாக உருவெடுத்துள்ளது. தகாத வார்த்தைகளால் மாமனாரும், மருமகனும் பேசிக் கொண்டார்கள்.. இதனால் பதறிப்போன மணப்பெண், குறுக்கே வந்து தகராறை தடுத்துள்ளார்.. ஆனால் மதுபோதையில் இருந்த மாப்பிள்ளை, மாமனாரையும் புதுப்பெண்ணையும் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டாராம்.

    முதல்நாளே பிரிந்த தம்பதி

    இதனால் காயமடைந்த புதுப்பெண்ணும் அவரது அப்பாவும் செய்வதறியாமல் திகைத்தனர்.. உடனே புதுமாப்பிள்ளை அங்கிருந்து ஓடிவிட்டாராம்.. திருமணமான அன்றே இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டதால், புதுப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட புதுப்பெண்ணும் அவரது அப்பாவும் குளச்சல் போலீசில் புகார் அளித்துள்ளனர்..

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், கல்யாணத்தன்றே தனது மகளுக்கு இப்படியொரு நிலைமையைப் பார்த்து வேதனையடைந்த அப்பா, அன்றிரவே புதுப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.. இதனால் திருமணமான முதல் நாளிலேயே கணவன், மனைவி பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டது..

    முதலிரவுகூட நடக்கவில்லை

    4 வருடக் காதல்.. குடும்பத்தினர் சம்மதம்.. திருமணம்.. வரவேற்பு என மகிழ்ச்சியாக தொடங்கிய வாழ்க்கை, ஒரே நாளில், இப்படி மாறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.. முதலிரவுகூட நடப்பதற்கு முன்பே புதுப்பெண் தனது கணவரைப் பிரிந்து சென்றதும், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜோடிக்கு, திருமணமான அன்றே இப்படியொரு நிலைமை ஏற்பட்டதும், உறவினர்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    இது எல்லாத்துக்கும் காரணம், குடும்பங்களை சிதறடிக்கும் அந்த மதுபோதைதான்.. எப்பேர்ப்பட்ட மனித நல்லியல்புகளையும் வேரோடு சாய்த்துவிடுகிறதே இந்த போதை??!!!

    English Summary

    First Night Shock! Unbelievable Kanyakumari Wedding Twist as Groom Shows His True Colors Just Hours After Marriage