கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்

  • கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து வைத்திருந்ததால் கட்டிட பணிகள் தடைபட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் அகற்ற உத்தரவிட்டார்.

    Advertisement

    கடந்த 20 ஆண்டுகளில் வீடு கட்டும் போது, பலரும் அரசு நிலத்தையும் சேர்ந்த ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதை பார்க்க முடியும். கிராமங்களில் எல்லாம் தெருவில் பேருந்து செல்லும் அளவிற்கு இருந்த சாலைகள் கூட, கார் கூட செல்ல முடியாத அளவிற்கு சுருங்கி போயுள்ளன. கழிவறை கட்டுவதை, சுற்றுச்சுவர் கட்டுவது, வீட்டின் முகப்பை நீட்டித்து பாதி சாலையே ஆக்கிரமித்து இருப்பார்கள். இன்னும் சிலர் பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர்கள் அமைத்திருப்பார்கள். அந்த நிலங்களுக்கு காலப்போக்கில் பட்டாவும் வாங்கிவிடுவார்கள். அப்படித்தான் கன்னியாகுமரியில் ஒருவர் ஆக்கிரிமித்து இருந்தார். ஆனால் அந்த நிலத்தில் இருந்து அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்துக்குட்பட்ட ஏற்றக்கோடு ஊராட்சி, ஏற்றக்கோடு கிராம அலுவலகம் அருகில் கூத்தவிளாகத்தில் உள்ள சுமார் 3 சென்ட் நிலத்தை, சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆக்கிரமித்து, தனது வீட்டுடன் சேர்த்து சுற்று சுவர் கட்டியிருந்தார்.

    இந்த இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியிருந்தது. வீட்டின் முன்பு உள்ள அரசு இடம் தனக்கு சொந்தமானது என அந்த நபர் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர் விசாரணையின் முடிவில் அரசு நிலத்தை, அரசுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். என நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தும் ஆக்கிரமித்த இடத்தை விட்டுக்கொடுக்க அந்த நபர் முன்வரவில்லை.

    Advertisement

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் தாசில்தார் மரகதவல்லி, மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மதில்சுவரை இடிக்கும் பணி துவங்கியது. அஸ்திவாரத்துடன் அங்கன்வாடி கட்டும்பணி நடந்த நிலையில் தொடர்ந்து அந்த நபர் இடையூறு அளித்ததால் வேலை கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து கூத்தவிளாகத்துக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப், தாசில்தார் மரகதவல்லி, உட்பட பலர் வருகை தந்தனர்.

    ஆக்கிரமிப்பாளர் தரப்பில் வீட்டின் முன்பகுதியில் உள்ள அரசு இடத்தை விட்டுத்தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியர் அதற்கு சம்மதிக்காமல் அங்கன்வாடிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது, இதையொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் அரசுக்கு கையகப்படுத்த அதிகாரிகளிடம் கூறினார். மேலும் இந்த வேலையில் எந்த வித தாமதமும் ஏற்படுத்தாமல் உடனே செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை அப்பகுதியினர் பாராட்டினர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக உடனே நோட்டீஸ் அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

    Advertisement

    கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பாளர் தரப்பில் வீட்டின் முன்பகுதியில் உள்ள அரசு இடத்தை விட்டுத்தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியர் அதற்கு சம்மதிக்காமல் அங்கன்வாடிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது, இதையொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் அரசுக்கு கையகப்படுத்த அதிகாரிகளிடம் கூறினார்.

    English Summary

    In Kanyakumari, the encroacher requested to be allowed to retain the government land located in front of the house. However, the District Collector refused this request and instructed officials to reclaim for the government not only the land encroached upon—which had been allocated for an Anganwadi—but also all adjacent areas that had been encroached upon.