காதலனுடன் ஜாலி டூர்.. குறுக்கே பெற்ற குழந்தைகள்.. உடம்பெல்லாம் சிகரெட் நெருப்பு.. இப்படி ஒரு தாயா?

  • கன்னியாகுமரி: காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகவும், ஜாலியாக ஊர் சுற்றுவதற்காகவும், பெற்ற 2 குழந்தைகளையே ஒரு தாய் கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கம்பால் அடித்தும், சிகரெட்டால் உடலில் சூடு வைத்தும் அந்த குழந்தைகளை துன்புறுத்தியிருக்கிறார் அந்த தாய்.. இதற்கு அந்த தாயின் கள்ளக்காதலனும் உடந்தை.. இப்போது 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளது.

    Advertisement

    நாகர்கோவிலை அடுத்த பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல்.. கூலித் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்..

    Advertisement

    கன்னியாகுமரி தாய்

    சுகன்யாவின் பள்ளி தோழர் ரஞ்சித்குமார்.. இவருடன் பள்ளி நாட்களிலிருந்தே பழக்கத்தில் உள்ளார்.. தீவிரமாக காதலித்தும் வந்துள்ளனர். ரஞ்சித்குமார் (27), இலந்தவிளையைச் சேர்ந்தவர்.. இப்போது காற்றாலையில் வேலை செய்து வருகிறார்.. சுகன்யாவுக்கு திருமணமான பிறகும், 2 குழந்தைகள் பிறந்த பிறகும் ரஞ்சித்குமாருடனான தொடர்பு தொடர்ந்துள்ளது..

    கணவர் அழகுவேல் வேலைக்குச் சென்ற நேரத்தில் ரஞ்சித்குமாரை வீட்டுக்கு வரவழைப்பது, 2 பேரும் சேர்ந்து அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வது என இந்த உறவு நீடித்துள்ளது..

    2 குழந்தைகள் பரிதாபம்

    ஒரு கட்டத்தில் மனைவியின் திருமணத்தை மீறிய உறவு அழகுவேலுக்குத் தெரியவந்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யா, மார்த்தாண்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரஞ்சித்குமாருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்..

    Advertisement

    ஆனாலும் ரஞ்சித்குமாருடன் சேர்ந்து வாழ்வதற்குக் குழந்தைகள் தடையாக இருப்பதாக சுகன்யா நினைத்தார்.. இதனால், தாயும் ரஞ்சித்குமாரும் சேர்ந்து குழந்தைகளைக் கம்பால் அடித்தும், உடலின் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்..

    அதிர்ச்சியில் கணவர்

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குழந்தைகளை ஈத்தாமொழி பகுதியில் வசிக்கும் தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் சுகன்யா விட்டுச் சென்றுள்ளார்.. அப்போது குழந்தைகளின் உடல் முழுவதும் ரத்தக் காயங்களும் தீக்காயங்களும் இருந்ததை பார்த்து ராஜலிங்கம் அதிர்ச்சியடைந்தார்..

    பிள்ளைகளை இப்படி போட்டு சித்ரவதை செய்துள்ளாரே என்ற கோபத்தில், இதுகுறித்து சுகன்யாவிடம் கேட்டுள்ளார்.. ஆனால் சுகன்யா அதற்கு அலட்சியமாக பதில் சொன்னாராம். அத்துடன், ரஞ்சித்குமாருடன் சேர்ந்து ராஜலிங்கத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் சுகன்யா.

    Advertisement

    இதனால் சந்தேகமடைந்த ராஜலிங்கம், குழந்தைகளிடமே என்ன நடந்தது பக்குவமாக விசாரித்துள்ளார்.. அப்போதுதான் அம்மாவும் அவருடன் இருந்த நபரும் சேர்ந்து தங்களைக் கம்பால் அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாகக் குழந்தைகள் அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர்..

    அண்ணன் கிட்ட உதவி கேட்ட தங்கை.. மறு நிமிடமே குளச்சல் லாட்ஜில் திருப்பம்.. கதிகலங்கிய கன்னியாகுமரி

    ஜோடியாக கைது

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜலிங்கம், உடனடியாக சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.. புகாரின்பேரில் போலீசார் காயமடைந்த 2 குழந்தைகளையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்..

    Advertisement

    ஆனால் அதற்குள் கள்ளக்காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர்.. எனினும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுகன்யா மற்றும் ரஞ்சித்குமாரைத் தேடி வந்தனர்.. இறுதியில் இருவரையும் கைது செய்து விட்டனர்.. குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்..

    கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த நிலையில், பெற்ற குழந்தைகளையே தாய் டார்ச்சர் செய்ததாக வெளியாகியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

    English Summary

    Kanyakumari Mother Shocker.. Lover, Joy Rides and 2 Kids Burned With Cigarettes? How Could She?