அவங்கள கடிச்சு வை கைது செய்ய வந்த போலீஸ்காரரை அலறி ஓடவிட்ட கன்னியாகுமரி கிருஷ்ணவேணி! என்ன நடந்தது

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரு வழக்கத்திற்கு மாறான சம்பவம் நடந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவரைக் கைது செய்ய சென்ற சப்-இன்ஸ்பெக்டரை, குற்றவாளியின் குடும்பத்தினர் வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்திருக்கிறார்கள்.. இதைக்கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். என்ன நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில்?

    Advertisement

    குமரி மாவட்டம் மேல நெய்யூர் சிராயன்விளை பகுதியைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ் ராஜ் (வயது 31).. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாக அவர் தவித்துக் கொண்டிருந்தார்.

    Advertisement

    கன்னியாகுமரி தம்பதி

    அப்போதுதான் ஆரல்வாய்மொழி அருகே தோவாளை தேவர் நகரில் வசித்து வரும் அவரது உறவினரான கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் நாகசுமன் (வயது 26) ஆகியோர், கிரேட் பிரின்ஸ் ராஜுக்கு தைரியம் சொன்னார்கள்.. அதுமட்டுமல்லாமல் கிரேட் பிரின்ஸ் ராஜின் குடும்ப சொத்துக்களை தங்கள் மூலமாக வழக்கு தொடர்ந்து, அனைத்தையும் மீட்டு தருவதாகவும், தம்பதி நம்பிக்கை தந்தனர்.

    அத்துடன் தவணை முறையில் சுமார் 5 லட்சத்து 93 ஆயிரத்து 390 ரூபாயையும், ஒரு சொகுசு காரும், தங்களுக்கு வேண்டும என்றும் கேட்டு வாங்கியுள்ளனர். ஏற்கனவே நொந்து போயிருந்த பிரின்ஸ் ராஜுக்கு, இந்த தம்பதியினர் பேசிய வார்த்தைகள் ஆறுதலை தந்ததால், அவர்கள் கேட்ட பணம், காரை தந்தார் பிரின்ஸ் ராஜ்.

    Advertisement

    பண மோசடி - வழக்குப்பதிவு

    ஆனால் நீண்ட நாட்களாகியும் சொத்துக்களையும் மீட்டுத் தராமல், வாங்கிய பெருந்தொகையையும், காரையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட தம்பதியினர்.. இதனால் ஏமாற்றமடைந்த ஜவுளி வியாபாரி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தம்பதி மீது அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர்.


    நாயை ஏவி கடிக்க விட்ட கிருஷ்ணவேணி

    முதற்கட்டமாக அவர்களிடமிருந்த காரைப் போலீசார் பறிமுதல் செய்த நிலையில், தம்பதியினர் தலைமறைவாக இருந்து வந்தனர். நேற்று அவர்கள் 2 பேருமே, தோவாளையில் உள்ள தங்களது வீட்டில் ரகசியமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பச்சைமால் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்தது.

    Advertisement

    வீட்டிற்குள் இருந்த நாகசுமனை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவரது மனைவி கிருஷ்ணவேணி கடுமையான எதிர்ப்பை காட்டினார்.. போலீசாரை உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தினார். மேலும் காவல் துறையினரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் உச்சக்கட்டமாக, வீட்டில் இருந்த தங்களது வளர்ப்பு நாயை அவிழ்த்து விட்டு, "அவர்களைக் கடி" என போலீசார் மீது ஏவி விட்டுள்ளார்.


    அவங்களை கடி - தெறித்து ஓடிய போலீஸ்

    கிருஷ்ணவேணி இப்படி சொன்னதுமே அந்த நாய், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனை நோக்கிப் பாய்ந்து சென்று அவரது உடலில் பயங்கரமாக கடித்து விட்டது.. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனுக்குப் உடம்பெல்லாம் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்டச் சொட்ட அவர் அலறினார். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறி, அக்கம் பக்கத்தினர் அனைவருமே திரண்டு வந்துவிட்டார்கள்..

    Advertisement

    சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நாய் மூலம் தாக்குதல் நடத்திய போதிலும், போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு, மோசடி தம்பதி நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

    தம்பதி கைது

    விசாரணையில், கைது செய்யப்பட்ட நாகசுமன் சாதாரணமானவர் அல்ல என்பதும், அவர் மீது ஏற்கனவே மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர், நீலகிரி மாவட்டம் ஊட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    Advertisement

    கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டரை நாய் ஏவிக் கடிக்க வைத்த இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான சம்பவம் தமிழக அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Kanyakumari’s Krishnaveni in Spotlight.. Police Arrived for an Arrest but Ended Up Running Away