கன்னியாகுமரி எஸ்எஸ்ஐ ஆடிட்டே வந்தாரா? அதுவும் டியூட்டியில்? தூக்கியடிக்கப்பட்ட போஸ்டிங்

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மதுபோதையில் இருந்ததாக எழுந்த புகார், இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால், இந்த மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் மதுபோதையில் டியூட்டில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் ஏற்கெனவே பேசுபொருளாகி இருக்கிறது. அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    2020-ம் ஆண்டு பத்மநாபபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை முன்பு யூனிபார்ம் அணிந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி இருந்ததாகவும், மதுப்பிரியர்களிடம் ஆபாசமாக பேசியதாகவும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதற்கு முன்பும் சக போலீஸ்காரருடன் சண்டையிட்டதாக கூறி அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததாக அப்போதைய செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி சம்பவம்

    இந்த நிலையில், இப்போது 6 வருடங்கள் கழித்து, இதே கன்னியாகுமரியில் மீண்டும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தொடர்பான வீடியோ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை சம்பவம் சுசீந்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பறக்கை பகுதியில் நடந்துள்ளது.

    ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அங்கு சென்றிருக்கிறார். போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்காக வந்திருக்கிறார் என்றால், அங்கு விசாரணை நடந்து முடிந்துவிடும் என்று தான் பொதுவாக நினைப்போம். ஆனால் பறக்கையில் நிலைமை அப்படியில்லை.

    Advertisement

    விசாரணையின்போது அங்கிருந்த பொதுமக்களுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த அதிகாரி குடிபோதையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.. இதையடுத்து போதையில் போலீஸ்காரர் தள்ளாடுவதை அங்கிருந்தவர்கள் செல்போனை எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டனர்.. இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, விட்டது.

    டிரான்ஸ்பர் உத்தரவு

    போலீஸ் அதிகாரி ஒருவர் வழக்கு விசாரணைக்காக சென்ற இடத்தில், அவரே குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் காட்சி வீடியோவாக பரவியதால், இந்த விவகாரம் மேலதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுள்ளது.

    வீடியோ பரவியதுடன் பிரச்சனை முடிந்துவிடவில்லை.. உடனே இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. . அதன் தொடர்ச்சியாக அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    விளக்கம் தந்த எஸ்எஸ்ஐ

    ஆனால் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை அந்த அதிகாரி ஏற்கவில்லை. தனக்கு குடிப்பழக்கமே கிடையாது என்று அடித்து சொல்கிறார்.. தான் பேசுவதே அப்படித்தான் இருக்கும் என்றும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது, ஒருபக்கம் பொதுமக்கள் எடுத்த வீடியோ... அதன் அடிப்படையில் எழுந்த புகார்... மறுபக்கம் அதிகாரி தரப்பில் மறுப்பு... இதற்கிடையே ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர் என இந்த விவகாரம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மறுபடியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆரம்பத்திலேயே சரியாக விசாரிக்காமல், டிரான்ஸ்பர் தந்துவிட்டு விசாரணையா? என்றும் சிலர் இதை கேள்வி எழுப்பி வருகிறார்கள்..!!

    English Summary

    Kanyakumari SSI Came to Duty Drunk? Viral Video Sparks Transfer.. What Really Happened?