குடிகாரர்களுக்கு ஷாக் நியூஸ்.. இன்றும் நாளையும் பூட்டப்படும் டாஸ்மாக் கடைகள்! வெளியான அதிரடி ஆர்டர்!

  • கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிவடைந்திருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு கருதி விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சில பகுதிகளில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை பூஜிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் வழக்கமான உற்சாகத்தோடு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டன.

    Advertisement

    வீடுகளில் களிமண் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிறிய வகை விநாயகர் சிலைகளையும், பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளையும் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர். அது மட்டுமல்லாமல் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு மத அமைப்புகளும் பொது இடங்களில் காவல்துறை அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தன.

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த உடன் முதல், மூன்று மற்றும் ஐந்தாம் நாட்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இது விநாயகர் விஜர்சனம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    கைது நடவடிக்கை

    இதற்கிடையே விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக குறிப்பிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களும் போலீசாரின் கைது நடவடிக்கைகளும் இருந்தது. இதை அடுத்து தற்போது விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதுக்கடைகளுக்கு விடுமுறை

    மேலும் சட்டம் ஒழுங்கு - பாதுகாப்பு கருதி விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருப்பதை முன்னிட்டு இன்றும் நாளையும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியூர்களுக்குள்ள அறிவிப்பில்," கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 19.09.2026 மற்றும் 20.09.2026 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை. நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை, மேல்புறம் முதல் குழித்துறை. மற்றும் பம்மம் முதல் குழித்துறை வரை உள்ள 11 இடங்களில் நடைபெற உள்ளது.

    Advertisement

    மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மட்டும் மேற்படி வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி, முடியும் வரை மூடிவைத்திட வேண்டுமென என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    TASMAC shops and FL liquor outlets in selected Kanyakumari areas will remain closed on September 19 and 20 for Vinayagar processions.