கன்னியாகுமரி: "அவன் என்னை வாழவிடமாட்டான்.. இனி நான் வாழ விரும்பல" என்று துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணவனின் வாட்ஸ்அப்பிற்கு இப்படியொரு மெசேஜை அனுப்பியிருந்தார் மனைவி.. இது தொடர்பாக போலீஸ் விசாரிக்க, சம்பந்தப்பட்ட நபரை தவெக கைது செய்த நிலையில், இப்போது அவரிடம் விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மூலைப்பாகம் திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சித்திரை. இவரது மகன் மகேஷ். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
மகேஷின் மனைவி அனிஷா. 33 வயதான இவர் நன்றாக படித்த பட்டதாரிப் பெண். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருபவர்.. இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன் வெளிநாட்டில் இருந்தாலும், குழந்தையை வளர்த்துக்கொண்டு, வேலையையும் பார்த்துக்கொண்டு வந்துள்ளார் அனிஷா. இந்நிலையில் கடந்த 11ம் தேதி திடீரென அனிஷா, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, துபாயில் இருக்கும் கணவர் மகேஷின் செல்போனுக்கு "அவன் என்னை வாழவிடமாட்டான்.. இனி நான் வாழ விரும்பல.. என்னை மன்னிச்சுடுங்க, நம்ம மகள பத்திரமா பாத்துக்கோங்க" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த மெசேஜைப் பார்த்ததும் பதறிப்போன மகேஷ், அனிஷாவின் செல்போனுக்கு தொடர்ந்து போன் செய்துள்ளார். ஆனால் அனிஷா போனை எடுக்கவே இல்லை. இதனால் பயந்துபோன மகேஷ், உடனடியாக தனது அப்பா சித்திரையை தொடர்புகொண்டு, "உடனே போய் அனிஷாவின் ரூமில் பாருங்கள்" என்று கதறியுள்ளார். பதறி அடித்துக்கொண்டு ஓடிய சித்திரை, மருமகளின் அறைக்கதவை உடைத்துப் பார்த்தபோது, அனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு உறைந்துபோனார். இதுகுறித்து சித்திரை, உடனடியாக குலசேகரம் போலீசில் புகார் தந்துள்ளார்.. தனது மருமகளின் இந்த முடிவுக்கு, மரம் வெட்டும் தொழிலாளியான சங்கர் என்பவர் தான் முழு காரணம் என்று மாமனார், தன்னுடைய புகாரில் பெயரை சொல்லியே குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த குலசேகரம் போலீசார் விசாரணையை கையிலெடுத்தனர்.. அப்போதுதான் சங்கர், தவெக பிரமுகராக செயல்பட்டு வருபவர் என்பது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, சம்பவத்தன்று அனிஷாவிடம் சங்கர் தேவையில்லாமல் தகராறில் ஈடுபட்டிருப்பதும், அவரை மனரீதியாக மிரட்டியதும் தெரியவந்தது. சங்கரின் டார்ச்சரை தாங்க முடியாமல் தான், அனிஷா இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்த விஷயம் போலீசுக்கு சென்றது தெரிந்ததுமே சங்கர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு உடனடியாக ஊரை விட்டு தப்பி, தலைமறைவாகி விட்டார்.. இதற்கு பிறகு அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவரது செல்போன் சிக்னல் மற்றும், சீக்ரெட்டாக கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் போலீசார் சென்னைக்கு கிளம்பினார்கள்.. அங்குதான், சங்கர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்லாவரத்தில் சங்கரை கைது செய்த போலீசார், குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்து வந்துள்ளனர்.. தற்போது அனிஷாவை மிரட்டியதன் பின்னணி என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பட்டதாரி பெண்ணின் இந்த பரிதாப முடிவு, கன்னியாகுமரியில் பெரும் சோகத்தையும், தவெகவுக்குள் பரபரப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!கன்னியாகுமரி தம்பதி
துபாய் கணவனுக்கு போன மெசேஜ்
விசாரணையில் உறுதி
தவெக பிரமுகர் சிக்கியது எப்படி