8 மாத கர்ப்பத்துடன் ஆஸ்பத்திரி சென்ற பெண்.. டாக்டர்கள் கேட்ட ஒற்றை கேள்வியில் ஆடிப்போன கன்னியாகுமரி

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண், தனக்கு உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் அதற்கு பிறகுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் அந்த 19 வயது இளம்பெண்.. இவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. அதனால் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்..

    Advertisement

    டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில், 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டிருக்கிறார்கள்.. ஆனால், அந்த பெண், எந்த கேள்விக்குமே சரியாக பதில் சொல்லவில்லை.. முன்னுக்கு பின் முரணான உளறியிருக்கிறார்.. இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள், மார்த்தாண்டம் மகளிர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். .

    கன்னியாகுமரி இளம் பெண்

    இதையடுத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போதுதான் இளம்பெண் அந்த பகீர் தகவலை சொன்னார்..

    அதாவது ஆற்றூரை சேர்ந்த இந்த பெண், விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பை படிக்க நினைத்துள்ளார்.. இதற்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் சேர்ந்திருக்கிறார்.. அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகமாகி உள்ளது.. இதையடுத்து தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி வந்துள்ளனர்.

    Advertisement

    சிறுவனுடன் தவறான பழக்கம்

    இதற்கு பிறகு, களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கும் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.. சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோதெல்லாம், இந்த பெண் அங்கு சென்று சிறுவனை சந்தித்துள்ளார்.. இப்பெண்ணின் கட்டாயத்தின் பேரில் 2 பேரும் உடலுறவும் கொண்டுள்ளனர். இதில் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார்..

    ஆனாலும், இதுகுறித்து தன்னுடைய பெற்றோரிடம் எதுவுமே சொல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து 8 மாதம் கடந்தபோதுதான், பெண்ணின் உடல்நிலை மோசமாகி உள்ளது.. இதையும் பெற்றோரிடம் மறைத்துவிட்டு, தனியாகவே மருத்துமனைக்கு சென்றுள்ளார். அப்போது தான் அவர் கர்ப்பமானது வெளிச்சத்துக்கு வந்தது.

    கர்ப்பிணி மீது போக்சோ

    விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியான நிலையில், சிறுவனின் பெற்றோர் இதைக் கேட்டு கொந்தளித்து விட்டார்கள்.. தாங்கள் வீட்டில் இல்லாதபோது, மகனை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டதாக தாயார் தரப்பில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

    Advertisement

    இப்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

    ஒரே கோர்ஸில் 2 பேர் மட்டுமே

    இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், குழித்துறை கல்வி நிறுவனத்தில், விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு டிப்ளமோ படிக்க சேர்ந்தபோது, அங்கு வேறு யாருமே இல்லையாம்.. அந்த கோர்ஸில் இவர்கள் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.. இதனால் முதல் நாளிலிருந்தே 2 பேரும் நெருக்கமாக பேச ஆரம்பித்து விட்டார்களாம்.

    பொதுவாக போக்சோ சட்டம் என்றாலே பெண் குழந்தைகளையும் சிறுமிகளையும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்று என்ற தவறான புரிதல் சமூகத்தில் நிலவுகிறது. ஆனால், பாலின வேறுபாடின்றி 18 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு குழந்தையும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும்போது, குற்றத்தை செய்தது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே சட்டத்தின் உண்மையாகும்.

    Advertisement

    சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், மைனர் சிறுவனைப் பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது போக்சோ சட்டம் பாய்ந்திருப்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது... அதேசமயம் ஒரு இளம்பெண், அதுவும் கர்ப்பிணி போக்சோவில் கைதாகி உள்ளது, கவலையையும், அதிர்ச்சியையும் தருகிறது...!!

    English Summary

    Kanyakumari.. Truth Uncovered After Doctors Question 8 Month Pregnant Woman Who Came to Hospital