கன்னியாகுமரி: பெண் காவலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. கனிமவள லாரி உரிமையாளர் அதிரடி கைது!

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் காவலரை கனிமவளம் ஏற்றி வந்த லாரியால் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    குமரி மாவட்டம் ஆறு காணி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் லிட்டில் பிளவர் (43). இவர் மலையடி செக்போஸ்டில் பணியில் இருந்த போது அந்த வழியாக கனிம வளம் ஏற்றி வந்த டாரஸ்ட் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை நிறுத்தும்படி சைகை மூலம் கையை காட்டியுள்ளார்.

    Advertisement

    ஆனால் ஓட்டுநர் அவரை அச்சுறுத்தும் வகையில் மோதுவது போல் லாரியை ஓட்டி வந்துள்ளார். இதை பார்த்து பயந்து போய் ஒதுங்கி உள்ளார் காவலர் லிட்டில் பிளவர். பின்னர் லாரியை நிறுத்தாமல் அதிவேகமாகவும் சென்றுள்ளார். இதையடுத்து சோதனை சாவடி காவல் போலீசாருடன் இணைந்து 1/2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று லாரியை மடக்கிப் பிடித்துள்ளனர்.

    பின்னர் பளுகல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்ட போது லாரியை ஓட்டி வந்தது ஓட்டுநரும் உரிமையாளருமான ராபர்ட் ராய் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராபர்ட் ராயை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பெண் காவலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    In Kanyakumari district, a lorry owner has been arrested for allegedly attempting to kill a female police officer by running her over with a lorry that was transporting minerals.