நாகர்கோவில் கோவை ரயில்.. திடீரென 24 பெட்டிகளை மாற்றிய தெற்கு ரயில்வே! பயணிகளுக்கு அரிய வரப்பிரசாதம்


  • கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக கோயம்புத்தூருக்கு தினமும் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மிக முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயிலில், யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கப் பயணிகளுக்கு எந்தவிதமான தடையில்லாமல் தங்களது பயணத்தை மேற்கொள்ள கோல்டன் சான்ஸாக அமையும் என்றே தெரிகிறது. இதனை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    தென் மாவட்டங்களையும் கொங்கு மண்டலத்தையும் இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து அங்கமாக திகழ்வது, இந்த நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ்தான்.. இந்த ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அலைமோதிக்கொண்டே வருகிறது.

    Advertisement

    நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ்

    அதுவும் வார இறுதி நாட்களிலும், சுபமுகூர்த்த தினங்களிலும் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்வது என்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வந்தது. அதனால்தான், ரயில் எண் 22667 மற்றும் 22668 ஆகிய எண்களின் கீழ் இயக்கப்பட்டு வரும் இந்த நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாகவே விடுத்தபடி வந்தனர்..

    இந்த ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வந்த பொதுமக்களின் கோரிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகமும் பரிசீலித்தது.. தற்போது அவர்களது கோரிக்கையை ரயில்வே உயர் அதிகாரிகள் ஏற்றுள்ளார்கள்.. அத்துடன், அந்த திட்டத்தை உடனடியாக அமலுக்கும் கொண்டு வந்துள்ளனர்..

    Advertisement

    தூங்கும் வசதி கொண்ட பெட்டி

    அதன்படி, இந்த ரயிலில் தற்காலிகமாக கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி, அதாவது ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி உடனடியாக இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பெட்டி இணைப்பானது இன்று சனிக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.. இது வருகிற ஜூலை மாதம் 31-ந்தேதி வரை தற்காலிகமாக நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய நற்செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

    அதேபோல நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒட்டுமொத்த பெட்டிகளின் எண்ணிக்கையிலும், அதன் உள்ளமைப்பிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இந்த ரயில் மொத்தம் 24 பெட்டிகளுடன் தண்டவாளத்தில் செல்ல தயாராகியுள்ளதாம்..

    Advertisement

    ஏசி பெட்டி, இரண்டடுக்கு பெட்டி

    இந்த புதிய பெட்டிகளின் வரிசை அமைப்பையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ரயிலில் இனி 1 முதலாம் வகுப்புடன் இணைந்த இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, 1 பிரத்யேக ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டிகள் சொகுசு பயணத்திற்காக இணைக்கப்பட்டுள்ளன. தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை, இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெட்டியையும் சேர்த்து மொத்தம் 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    முன்பதிவு செய்யாமல் அவசரமாக பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக 4 பொதுப் பெட்டிகளும் இந்த ரயிலில் தொடர்ந்து நீடிக்கும். சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி பயணிகளின் பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்தை உறுதி செய்யும் வகையில் 1 பிரத்யேக மாற்றுத்திறனாளி பெட்டியும், ரயிலின் சரக்குகளை கையாள்வதற்காக 1 சரக்கு பெட்டியும் என அனைத்தும் உள்ளடங்கி, மொத்தம் 24 பெட்டிகளுடன் இந்த ரயில் இனி நெல்லை மற்றும் கோவை மார்க்கத்தில் பயணிக்க போகிறது.

    Advertisement

    பயணிகளுக்கு வரப்பிரசாதம்

    மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இந்த கூடுதல் பெட்டி இணைப்பின் மூலம், நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் வழியாக கோவை வரை பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் வெயிட்டிங் லிஸ்ட்டிலுள்ள டிக்கெட்டுகள் உடனடியாக கன்பர்ம் ஆக அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

    ஜூலை மாத இறுதி வரை நீடிக்க உள்ள இந்த தற்காலிக கூடுதல் பெட்டி இணைப்பு, கொங்கு மண்டலத்திற்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே பயணிக்கும் பொதுமக்களுக்கு இந்த வார இறுதியில் கிடைத்த ஒரு அரிய வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது....!!!

    English Summary

    Nagercoil Coimbatore Train: Southern Railway Adds 24 Coaches, Big Relief for Passengers