நீதிமன்ற காவலில் உயிரிழந்த சபரி வர்மன் உடல் 4 நாளுக்கு பின் ஒப்படைப்பு.. என்ன நடந்தது?

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரி வர்மன் திடீரென இறந்தார். அவரை சிறை வார்டன்கள், சக கைதிகள் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்த நிலையில் இன்று குடும்பத்தினரை சமாதானம் செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஈத்தங்காட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் ( வயது 34). இவர் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கூறி செந்தாமரைகுளம் போலீசார் கடந்த 9 ம் தேதி கைது செய்தனர். அதன்பிறகு சபரி வர்மன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    Advertisement

    கடந்த 12ம் சிறையில் சபரி வர்மன் திடீரென்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் திரண்டு போராட்டம் நடத்தினர். சபரி வர்மன் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

    அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை கடந்த செவ்வாய்க்கிழமை குடும்பத்தினர் வாங்க மறுத்தனர். சபரி வர்மன் இறப்புக்கான காரணம் தெரிந்தால் தான் உடலை வாங்குவோம் என்று போர்க்கொடி உயர்த்தினர். இதற்கிடையே தான் பிரேத பரிசோதனை அறிக்கையில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    சபரி வர்மன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை அவரது குடும்பத்தினர் முன் வைத்துள்ளனர். அதுவரையில் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 3 சிறை வார்டன்கள், 8 கைதிகள் உள்பட மொத்தம் 11 பேர் கைது செய்தனர். அதோடு, நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், சபரி வர்மனின் மனைவியை சந்தித்து நிவாரணம் வழங்கினார். சபரிவர்மன் மனைவிக்கு தற்காலிகமாக அரசு வேலை, ரூ.10 லட்சம் நிவாரணம், குழந்தையின் படிப்புக்கு நிதி உதவி வழங்கினார். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

    Advertisement

    இந்நிலையில் தான், இன்று சபரி வர்மன் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று கொண்டனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவின் சிடி தனியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு மருத்துவ குழுக்களால் காயங்களும், பிரேத பரிசோதனை அறிக்கையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. மேலும் சபரி வர்மனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படம் என்று உறுதியளிக்கப்பட்டது. இதற்கு குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு சபரி வர்மன் உடலை பெற்று கொண்டனர்.

    English Summary

    Sabari Varman, a young man with a disability who was incarcerated in the Nagercoil District Prison in Kanyakumari district, died suddenly. Allegations arose that he had been beaten to death by prison wardens and fellow inmates. Consequently, his family had initially refused to accept his body even after the post-mortem examination was completed; however, the body was handed over to them today following efforts to pacify the family.