கன்னியாகுமரி: தவெக நிர்வாகிகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள்கள் வந்தவண்ணம் உள்ளன.. ஒரு பக்கம் பாலியல் புகார், இன்னொரு பக்கம் கொலை வழக்கு! அரக்கோணத்தில் தொடங்கி நாகர்கோவில் வரை என்ன நடக்கிறது? பெண் நிர்வாகி சிக்கிய இந்த வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் என்ன? இப்போது கன்னியாகுமரி கொலை விசாரணையில், நாகர்கோவில் போலீசாருக்கே பல சந்தேகங்கள் எழுந்துள்ளன...!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.. 43 வயதாகிறது.. இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்..
இவர் மீது தேரூர் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலிலும் சுரேஷின் பெயர் இடம்பெற்றுள்ளது.. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி இரவு சுரேஷ் தனது வீட்டில் திடீரென உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மனைவி பாரதி (37) தெரிவித்தார். இதையடுத்து, பூதப்பாண்டி போலீசார் சுரேஷின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சுரேஷ், 2 மாதங்களுக்கு முன்பு புத்தேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்ததாகவும், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் பாரதி போலீசாரிடம் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், போஸ்ட் ரிப்போர்ட்டம் வேறு விதமாக வந்தது.. சுரேஷ் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும், கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது என்றும் தெரியவந்தது. இதையடுத்து, மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார் சுரேஷின் மனைவி பாரதி... அப்போதுதான் பகீர் தகவல்கள் வெளியாகின. குமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி இணை செயலாளராக உள்ளாராம் பாரதி.. தனது கணவரை கொலை செய்ததை பாரதி ஒப்புக் கொண்டு விட்டார்.. ஆனால், இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து அவர் முழுமையாக தெரிவிக்கவில்லையம்.. அதனால் இந்த கொலையில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது, சுரேஷின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்ததுதான். சுரேஷ் இறந்த தினத்தன்று, வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து பாரதியிடம் போலீசார் கேட்டபோது, அந்த நேரத்தில் கரண்ட் போய்விட்டது.. அதனால் கேமராக்கள் இயங்கவில்லை என்று பதிலளித்தார். ஆனால் இது போலீசாருக்கு சந்தேகத்தை தந்தது.. காரணம், வீட்டில் இன்வெர்ட்டர் வசதி இருந்துள்ளது. கரண்ட் போயிட்டாலும் இன்வெர்ட்டர் மூலம் கேமராக்கள் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும். அதனால் போலீசார் இதுகுறித்தும் கேட்டனர். அதற்கு பாரதி, ஏற்கனவே இன்வெர்ட்டரையும் ஆஃப் செய்து விட்டேன் என்றார்.. கேமராக்கள் ஏன் செயல்படவில்லை என்பதற்காக பாரதி தந்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளது.. எனவே, பாரதியின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.. அதில் சில தகவல்களையும் சேகரித்துள்ளனர். இந்த கொலையில் பாரதியுடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தவெக நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக வீடியோ, ஆடியோ ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியிருந்தார். இப்போது நாகர்கோவிலில் கணவரைக் கொலை செய்ததாக தவெக பெண் நிர்வாகி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், பெண் நிர்வாகி ஒருவரும் கொலை வழக்கில் சிக்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது...!!கன்னியாகுமரி பாரதி
போஸ்ட் ரிப்போர்ட்டம் வேறு விதம்
வீட்டில் இன்வெர்ட்டர் வசதி
ராணிப்பேட்டை - இப்ப பெண் நிர்வாகி?