ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு.. ஆஜரான எம்.ஆர். விஜயபாஸ்கர்.. கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • கரூர்: ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கரூர் நகர முன்னாள் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ஆகியோர் இன்று கரூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.

    Advertisement

    கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக கரூர் சார் பதிவாளர் கடந்த 2024 ல் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கரூர் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிருத்விராஜ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் கரூர் நகர காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோர் நீதிபதி பரத்குமார் முன் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதுஒருபுறம் இருக்க, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை வாபஸ் பெறப் போவதாகக் கரூர் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former Minister MR Vijayabhaskar and former Karur Town Police Inspector Prithviraj appeared before the Karur court today for a hearing in a land fraud case valued at ₹100 crore.