கரூர்: தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோயில்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பெரும் துரோகம் இது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 கோயில்களுக்குச் சொந்தமான, 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன; இது இந்து கோயில்களுக்கு தவெக அரசு இழைக்கும் வெட்கக்கேடான துரோகச் செயல் என்று இந்து சமய ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை டாக்டர்.டி.ஜி.வினய் ஐஏஎஸ், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஜூலை 9ம் தேதி எழுதியள்ள கடிதத்தில் திருக்கோயில் பெயரில் உள்ள நிலங்களின் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டது. தவறுதலாக தனி நபர்கள் பெயரில் உள்ள நிலங்களும் தடை செய்யப்பட்டது . அவ்வாறு தவறுதலாகத் தடை செய்யப்பட்ட தனிநபர்களின் நிலங்களை தடை நீக்கம் செய்ய கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கோயில் நிலங்களின் விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.
திருக்கோயில் மற்றும் நிலங்கள் குறித்த அட்டவணை விவரங்கள் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடை நீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலங்களின் விவரங்கள் அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளது. அதில் புகழிமலையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 3 கிராமங்களில் நிலங்கள் உள்ளன. இதில் 214 ஏக்கர் நிலங்கள் தடை நீக்கப்படுகிறது. இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 719 ஆகும். அதேபோல் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 4 கிராமங்களில் நிலங்கள் உள்ளன. இதில் 204 ஏக்கர் நிலங்கள் தடை நீக்கப்படுகிறது.இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 637 ஆகும். இதேபோல் குப்புச்சிபாளையம் அருள்மிகு ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 1 ஒரு கிராமத்தில் உள்ள நிலங்களில், 132 ஏக்கர் நிலங்கள் தடை நீக்கப்பட்டுள்ளது. இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 334 ஆகும். அடுத்ததாக வெஞ்சமாங்கூடலூரில் உள்ள அருள்மிகு விக்ருதீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் உள்ளது. இதில் 2533 ஏக்கர் நிலங்களின் மீது உள்ள தடை நீக்கப்படுகிறது. இதில் பட்டதாரர்களின் எண்ணிக்கை 1700 ஆகும். ஒட்டுமொத்தமாக 3,085 ஏக்கர் நிலங்கள் தவறுதலாக கோயில் நிலமாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றின் மீதான தடை நீக்கப்படுகிறது. இதன் மூலம் 3300 பட்டாதாரர்கள் பயன்பெறுவார்கள்" இவ்வாறு இந்து அறநிலையத்துறையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்து கோயில் ஆர்வலர்க்ள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறநிலையத்துறை அமைச்சர் டிவிகே ரமேஷ்க்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். இந்து சமய ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ் பல்வேறு கோயில்கள் நிலங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் கோயில்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். இவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோயில்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பெரும் துரோகம் இது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 கோயில்களுக்குச் சொந்தமான, 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன; இது இந்து கோயில்களுக்கு தவெக அரசு இழைக்கும் வெட்கக்கேடான துரோகச் செயல்" இவ்வாறு டி.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.