கரூர்: கரூர் மாவட்டத்தை அடுத்துள்ள குளித்தலை அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, சிறுமியின் பாட்டி நடுரோட்டில் ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். மேலும், அவர் படுகாயமடைந்ததால் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே உள்ள குண்டாங்கல்பாறை பகுதியில் வசிப்பவர் மாணிக்கம். கட்டிட தொழிலாளியான இவரிடம், உடன் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் தனது 4 வயது மகளை பாட்டி வீட்டில் விடுமாறு சொல்லி, இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை நேராக பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லாமல்.. மாணிக்கம் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே அச்சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து வயிற்று வலி என சொல்லி கொண்டே இருந்ததால்.. அந்த சிறுமியை பாட்டி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த பாட்டி கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார். சிறுமியிடம் என்ன நடந்தது என கேட்டபோது அச்சிறுமி என்ன நடந்தது என்பதை கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பாட்டி, மாணிக்கத்தை தேடி சென்றதாக கூறப்படுகிறது. அவரை குளித்தலை சுங்கச்சாவடி பகுதியில் கண்டுபிடித்துள்ளார். முதலில் மாணிக்கத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது மாணிக்கம் தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பாட்டி, அரிவாளை எடுத்து சரமாரியாக அந்த நபரை வெட்டியுள்ளார். இதில் அவரது தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த நபரை பாட்டி தாக்கிய நிலையில், சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபாலியல் வன்கொடுமை
ஓட ஓட வெட்டி தாக்குதல்
மீட்ட போலீசார்