கரூர் எஸ்பிஐ வங்கியில் 4 பேர்.. லாக்கரை உடைக்கும்போது என்ன நடந்தது தெரியுமா? அரண்ட அரவக்குறிச்சி

  • கரூர்: கரூர் அரவக்குறிச்சி எஸ்பிஐ வங்கியில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் புகுந்து லாக்கரை குறிவைத்துள்ளது... ஜன்னல் கம்பிகளையும் உடைத்துவிட்டது.. வங்கிக்குள்ளேயும் நுழைந்து விட்டது.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? இதை பற்றின செய்திதான் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரா கிராம மக்களின் நம்பிக்கைக்குரிய ஒன்றாகத் திகழும் இந்த வங்கியில், இன்று அதிகாலை நேரத்தில் அரங்கேறிய சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உறைய வைத்துள்ளது.

    Advertisement

    கரூர் அரவக்குறிச்சி எஸ்பிஐ வங்கி

    நேற்று மாலை வழக்கம்போல், வங்கிப் பணிகள் அனைத்தும் முடிந்து, வங்கி பூட்டப்பட்டது. ஆனால், நள்ளிரவு சரியாக 1 மணியளவில், அடர்ந்த இருட்டில் 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று வங்கி வளாகத்திற்குள் சத்தமின்றி நுழைந்துள்ளது.. 4 பேருமே முகமூடி அணிந்திருந்தனர்..

    வங்கியின் பின்புறம் ஆள்நடமாட்டம் சுத்தமாக இல்லாததால், அந்த பகுதியில் இருந்த ஜன்னல் கம்பிகளை அடித்து நொறுக்கி, அதன் வழியாக வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.

    வங்கி லாக்கருக்கு குறி

    வங்கிக்குள் சென்ற அந்த முகமூடி ஆசாமிகள், நேராக வங்கியின் லாக்கரை குறிவைத்துள்ளனர். கோடிக்கணக்கிலான பணமும் தங்க நகைகளும் இருக்கும் அந்த மெயின் லாக்கர் பூட்டை உடைக்க முயன்றிருக்கிறார்கள்.. ஆனால், லாக்கர் பூட்டை தொட்ட அடுத்த நிமிடமே, வங்கியின் அதிநவீன பாதுகாப்பு சாதனமான கொள்ளை தடுப்பு அலாரம் காதை பிளக்கும் சத்தத்துடன் அலறத் தொடங்கியது.

    Advertisement

    இந்த அலாரம் அடிக்கும் அதேநேரத்தில், வங்கியின் ஆட்டோமெடிக் சென்சார் அமைப்பு மூலம், வங்கி ஊழியர்களின் செல்போன்களுக்கும் மெசேஜ் அலர்ட் பறந்துள்ளது.. திடீரென அலாரம் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் வந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, அந்த இருளில் அலறியடித்துக்கொண்டு தப்பி ஆளுக்கொரு பக்கம் ஓடிவிட்டார்கள்..

    அடிச்சி பிடிச்சு ஓடிய 4 பேர்

    இதனிடையே, செல்போனுக்கு வந்த மெசேஜ்ஜை பார்த்து பதறியடித்து கொண்டு வங்கி ஊழியர்கள், ஊழியர்கள், வங்கிக்கு ஓடிவந்தனர்.. அங்கு ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தந்தனர்..

    Advertisement

    சம்பவ இடத்திற்கு புயல் வேகத்தில் வந்த போலீசார், வங்கி ஊழியர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர். நல்லவேளையாக, வங்கியிலிருந்த கோடிக்கணக்கிலான பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதுவுமே கொள்ளையர்களிடம் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களையும் கைரேகைகளையும் சேகரித்தனர்.

    யார் அந்த 4 பேர்

    அத்துடன் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றியுள்ள போலீசார், தப்பியோடிய அந்த 4 முகமூடி ஆசாமிகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர். 50 ஆண்டு பழமையான வங்கியில் நடந்த இந்த நள்ளிரவு துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அலாரம் + அலர்ட் மெசேஜ் இரண்டுமே ஒரே நேரத்தில் பறந்ததால், கோடிக்கணக்கான பணம், நகை லாக்கரிலிருந்து தப்பியிருக்கிறது.

    Advertisement

    சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற "காரா" (Kara).. நள்ளிரவில் வங்கிக்குள் புகுந்து லாக்கரை உடைக்க முயலும் கொள்ளை சம்பவங்களை நினைவூட்டும் வகையில் இந்த கரூர் சம்பவம் நடந்திருக்கிறது.. இருந்தாலும், நைட் செக்யூரிட்டி யாருமே இல்லையா? பின்பக்கம் ஜன்னலை உடைத்து உள்ளே நுழையும் அளவுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்ற கேள்வியும் நமக்குள் எழாமல் இல்லை..!!

    English Summary

    Karur Aravakurichi SBI Bank Robbery Attempt.. 4 Masked Men Target Locker, What Happened Next?