கரூர்: தமிழக அரசியலில் கடந்த 1 வருடமாக விவாதப் பொருளாக இருப்பது கரூர் கூட்ட நெரிசல் வழக்கும், அதில் சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணையும் தான். 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை, தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து (SIT) சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் 2025 அக்டோபர் 13 அன்று உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது.
விசாரணை தொடங்கி மாதங்கள் 1 வருடம் கடந்துவிட்டது.. விஜய்யும் முதல்வராகிவிட்டார்.. ஆனால் விஜயிடம் மார்ச் 15, 2026 அன்று சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட பிறகும், இதுவரை சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகையை (Chargesheet) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்விகளையும் யூகங்களையும் கிளப்பியுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் புதுடெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் பல முறை நேரில் ஆஜரானார். ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மார்ச் 15, 2026 அன்று மீண்டும் அவரிடம் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குச் சென்றபோது தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவியது. ஆனால், பல மணி நேர விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் முகத்தில் காணப்பட்ட புன்னகையும் நிம்மதியும் பலரது கவனத்தையும் ஈர்த்தது. வழக்கமாக கடுமையான குற்றவியல் வழக்குகளில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தலைவர்கள் சந்திக்கும் நெருக்கடி அங்கு தென்படவில்லை என்பதே பொதுமக்களின் பேச்சாக இருந்தது. வெளியே காரில் வந்தவர்.. காருக்கு மேலே வந்து கை காட்டியபடி உற்சாகமாக வெளியே சென்றார். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் விஜய் தரப்புக்கும் இடையே மறைமுகமான ஒரு நல்லுறவு அல்லது அரசியல் புரிதல் உருவாகியுள்ளதா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் வலுத்து வருகிறது. விஜய் கட்சி தொடங்கிய காலத்தில் சில கொள்கை ரீதியான முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தாலும், நடைமுறையில் மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகள், திட்டங்கள் அல்லது நிலைப்பாடுகள் குறித்து அவர் பெரிய அளவில் கடுமையான எதிர்ப்புக் குரல்களை எழுப்புவதில்லை என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆட்சிக்கு வந்த பின் விஜய் பாஜகவை சுத்தமாக எதிர்ப்பதே இல்லை. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மிக விரைவாக வழக்கு தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் சிபிஐ, கரூர் வழக்கில் இவ்வளவு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. உச்சநீதிமன்றமே வழக்கை நேரடியாகக் கண்காணித்து வரும் சூழலில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் நிலவும் இந்தத் தாமதம் அரசியல் ரீதியான சமரசத்தின் வெளிப்பாடா என்ற வாதத்தை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருக்கின்றன. இவ்வளவு பெரிய விபத்துக்கு யார் பொறுப்பு, கூட்ட மேலாண்மையில் ஏற்பட்ட தவறுகள் என்ன, தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதற்கான அதிகாரப்பூர்வ பதிலை சிபிஐ இன்னும் நீதிமன்றத்தின் முன் வைக்கவில்லை. நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு அவ்வப்போது கள ஆய்வுகளை நடத்தி வந்தாலும், இறுதி அறிக்கை எப்போது வெளியாகும் என்பது புதிராகவே உள்ளது. சட்டம் தன் கடமையை நடுநிலையாகச் செய்யுமா அல்லது அரசியல் சமன்பாடுகளுக்கு மத்தியில் இந்த வழக்கு மெல்ல நீர்த்துப் போகுமா என்பதை வரவிருக்கும் நாட்கள்தான் முடிவு செய்யும்.சிபிஐ விசாரணை மற்றும் விஜயின் புன்னகை
பாஜக - விஜய் நெருக்கமும் அரசியல் விமர்சனங்களும்
மரகதம் குமரவேல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்.. வேலையை காட்டிய காங்கிரஸ்.. கடுப்பில் தவெக
கரூர், கோவையில் திடீர் மாற்றம்! சைலண்ட்டாக அமலுக்கு வந்த மும்மொழிக்கொள்கை? TRB ராஜா கேள்வி!
சாமானிய மக்கள் கேட்கும் கேள்விகள்