மனைவி வீடியோ பார்த்துட்டேன்.. முடியல..ங்க.. 4 லட்சம்? விஷ பாட்டிலுடன் கரூர் தவெக தனலட்சுமி கணவர்

  • கரூர்: "எனக்கு உயிரோட வாழ புடிக்கலங்க.. நினைச்சா கூட சாப்பிடவும் முடியவில்லை... சாப்பிட்டாலும் சாப்பாடு இறங்கல.. கட்சி மீட்டிங்கு மீட்டிங்ன்னு கூட்டிட்டு போய் என் பொண்டாட்டிய கிட்ட பழக்கமாயி ரொம்ப அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி என்னால் வெளியில் தலை காட்ட முடியல" என்று கதறி அழுதவாறே சொல்கிறார் கரூர் தவெக தனலட்சுமியின் கணவர்.. கையில் பூச்சிக்கொல்லி மருந்துடன், கண்ணீர் விட்டு அழுது பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது?

    Advertisement

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கடவூர் தாலுக்கா, மாவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெருமாள் கோவில்பட்டி.. இங்கு வசித்து வருபவர் ராஜலிங்கம். 28 வயதான இவர் ஒரு லாரி டிரைவர் ஆவார்.

    Advertisement

    கரூர் தவெக தனலட்சுமி

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரான தனலட்சுமியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ராஜலிங்கம். 2 பேரும் தனியாகக் குடும்பம் நடத்தி வந்த நிலையில், தம்பதிக்கு நடுவே தகராறு வந்துள்ளது. இனால் தனலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பலமுறை நேரில் சென்று அழைத்தும் அவர் மீண்டும் வர மறுத்துவிட்டாராம்..

    கரூர் தம்பதி - கணவர் வீடியோ

    இதனிடையே, தவெகவில் கடவூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தனலட்சுமிக்கும், அதே கட்சியின் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வரும் முத்துசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் எல்லை மீறி தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது. கடவூர் அருகே உள்ள இடையபட்டி பகுதியில் காருக்குள் இருவரும் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் பரவிவிட்டது.

    Advertisement

    இப்படிப்பட்ட சூழலில், தன் கையில் பூச்சிக்கொல்லி விஷப் பாட்டிலை வைத்துக்கொண்டு, கண்ணீருடன் உருக்கமாக பேசி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் தாலி கட்டிய கணவர் ராஜலிங்கம்.

    தவெக தனலட்சுமி

    அந்த வீடியோவில் "எனக்கு வாழவே சுத்தமா பிடிக்கலங்க... என் பொண்டாட்டி அடுத்தவனோட இருக்கிற வீடியோவை பார்த்துட்டேன். இன்னைக்கு வரையிலும் அவன் வீட்ல தான் இருக்கிறா. நான் டிரைவருங்க, என்னால வெளியில தலைகாட்ட முடியலங்க. என்னை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்திட்டா. முத்துசாமிங்கிறவனோட என் பொண்டாட்டி இருக்குற வீடியோவை நான் பார்த்துட்டேன், எனக்கு பொறுக்கலங்க. என்ன சொல்றதுனே தெரியலங்க

    Advertisement

    உயிரோட வாழ பிடிக்கலங்க

    என் மாமியார், மாமனாருக்கு அவன் 4 லட்ச ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறான்னு என்கிட்ட சொன்னா. அந்த பணத்தை கொடுத்ததினால், அவன் கூட மதியம் 1 மணியில் இருந்து 2 மணி வரையிலும் மீட் பண்ணிக்கிட்டு, அவன் கூட இருந்த வீடியோவை நான் பார்த்ததினால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

    உயிரோட வாழ பிடிக்கலங்க, நினைச்சா கூட சாப்பிட முடியல... கட்சி மீட்டிங்னு கூட்டிட்டு போய் என் பொண்டாட்டிகிட்ட பழக்கமாகி அசிங்கப்படுத்தி என்னால் வெளியில தலைகாட்ட முடியல.

    இதுகுறித்துக் கேட்டதற்கு, வண்டி ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.. எனக்கோ, என் குடும்பத்திற்கோ ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மனைவியும், அந்த ஒன்றிய செயலாளருமே காரணம்.

    Advertisement

    வயல்வெளியில் தற்கொலை முயற்சி

    மனைவியுடன் கள்ளத்தனமாக பழகி வந்ததோடு என் வாழ்க்கையே நாசமாக்கிய அவர் மீதும், எனது மனைவிக்கும், எனக்கும் பிரச்சனையை ஏற்படுத்திய மாமனார், மாமியார் மீதும் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மன உளைச்சலில் தான் இந்த தற்கொலை முடிவை எடுக்க நேரிட்டது" என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

    இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. வாழ்க்கையே வெறுத்துப் போய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவரை, உறவினர்கள் பதறியடித்து மீட்டு மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.. பிறகு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஓடிவந்து மறுக்கும் தனலட்சுமி

    ஆனால் மேற்கண்ட இந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் தனலட்சுமி மறுத்துள்ளார்.. தனக்கும் தவெக நிர்வாகிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், கணவர் தவறான குற்றச்சாட்டைச் சொல்வதாகவும் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். எனினும், தவெக நிர்வாகிகள் மீது தொடர்ந்து இப்படி சர்ச்சைகளும், பரபரப்புகளும் கிளம்பி வருவது, அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது...!!

    English Summary

    Karur TVK Dhanalakshmi’s Husband Breaks Down After Watching Wife’s Video.. ₹4 Lakh?