பெண்ணிடம் தங்கசங்கிலி பறிக்க முயற்சி.. கரூர் தவெக செயலாளர் அதிரடி கைது! காட்டிக்கொடுத்த சிசிடிவி

  • கரூர்: பெண்ணிடம் தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்ற வழக்கில் கரூர் மாவட்டம் புகழூர் டவுன் தவெக செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அவர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அதன் பின்னணி பற்றிய விவரம் வருமாறு:

    Advertisement

    கரூர் மாவட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள என்எஸ்கே நகரை சேர்ந்தவர் பிரியா (வயது 40). சுதந்திர தினநாளில் இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வருந்தியபாளைத்துக்கு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவர் கரூர் - கோவை ரோட்டில் நொய்யல் அருகே வேட்டமங்கலம் தனியார் பள்ளியின் அருகே சென்றார்.

    Advertisement

    அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த நபர் திடீரென்று பிரியாவின் தங்க தாலி செயினை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்து கொண்ட பிரியா தனது ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார். இதனால் நொடிப்பொழுதில் அந்த நபரிடம் தங்க தாலி செயின் சிக்கவில்லை.

    சிறிது தூரம் சென்று பிரியா கண்ணாடியில் பார்த்தார். செயின் பறிக்க வந்த நபர் அவரை விட்டு விலகி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பிரியா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக போலீசார் சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    Advertisement

    அப்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள தனியார் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் செயின் பறிக்க முயன்ற நபரின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதேவேளையில் அந்த நபர் வந்த பைக்கில் பதிவெண் இல்லாதது தெரியவந்தது. இதனால் உருவத்தை வைத்து வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஒருவரை இன்று கைது செய்தனர். அவரது பெயர் நந்தகுமார் (வயது 29) என்பதாகும். இவர் மூலிமங்கம் கிராமத்தை சேர்ந்தவர்.

    அதுமட்டுமின்றி இந்த நந்தகுமார், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். புகழூர் டவுன் தவெக செயலாளராக பொறுப்பு வகித்து வருவதும் தெரியவந்தது. நந்தகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    English Summary

    Police have swiftly arrested the TVK secretary of Pugalur Town, Karur district, in connection with a case involving an attempt to snatch a gold *thali* chain from a woman. He was apprehended based on footage captured by CCTV cameras.