சிட்டா வழங்க மீன் வறுவல் கேட்ட கரூர் விஏஓ.. விவசாயி மகன் அரசு அதிகாரியிடம் என்ன சொன்னார் தெரியுமா?

  • கரூர்: கரூர் விஏஓ செய்ததை பார்த்தீங்களா? ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்று தவெக தரப்பில் கூறப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிட்டா வழங்குவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பேசியதாக வெளியான ஆடியோ, சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

    Advertisement

    கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட தேவர்மலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி, வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

    Advertisement

    கரூர் விவசாயி கேட்ட சிட்டா

    இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் விவசாயி தேவராஜை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.. ஆனால், அந்த போனை தேவராஜின் மகன் எடுத்துப் பேசியுள்ளார்.

    விவசாயிதான் போனை எடுத்திருக்கிறார் என்று நினைத்த விஏஓ கார்த்திக், "எங்கே இருக்கீங்க" என்று கேட்டிருக்கிறார்..

    அதற்கு தேவராஜின் மகன், நான் பாளையத்தில் இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். உடனே விஏஓ, "பஸ் ஸ்டாண்டில் உள்ள ஃபிரண்ட்ஸ் ஹோட்டலில் 2 மீன் வறுவல், தனியாக குழம்பு, தனியாக ஈர வெங்காயம் பார்சல் செய்து வாங்கி வா" என்று சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி மகன், "நான் தேவராஜ் மகன் பேசுகிறேன்" என்று என்று சொல்லியிருக்கிறார்.. அப்போது விஏஓ, "சரி, ஆபீசுக்கு வாங்க, வந்து வாங்கிக்கோங்க" என்று தெரிவித்துள்ளார்..

    கவர்ன்மெண்ட் சம்பளம்

    உடனே விவசாயியின் மகன், "உங்களிடம் ஒரு டவுட் கேட்கலாமா சார்? கவர்மென்ட்ல உங்களுக்கு சம்பளம் தரவில்லையா? கவர்ன்மென்ட்டுல சம்பளம் தரும்போது, இதெல்லாம் எதுக்கு எங்களிடம் கேட்கறீங்க " என்று கேட்டுள்ளார்..

    அதற்கு விஏஓ, "ஆபீசுக்கு வாங்க... உங்க அப்பாவை வர சொல்லுங்க, எனக்கு எதுவும் வாங்கிட்டு வர வேண்டாம்.. உங்க அப்பாவை உடனே வந்து வாங்கிட்டு போக சொல்லுங்க" என்று சொல்லி போனை வைத்து விட்டாராம்.. விஏஓ கார்த்திக் மற்றும் விவசாயியின் மகன் பேசிய இந்த பேச்சுதான், ஆடியோவாகவும் இணையத்தில் சுற்றி, அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.

    Advertisement

    விஏஓ கார்த்திக் சஸ்பெண்ட்

    இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கடவூர் தாசில்தார் பானுமதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எனக்கு 4 நாட்களுக்கு முன்பே நண்பர்கள் மூலம் தகவல் தெரியும்.. இந்த புகார் குறித்து கலெக்டருக்கு விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும், இதுகுறித்து குளித்தலை சப்-கலெக்டர் முடிவு எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

    இதனிடையே, விஏஓ கார்த்திக்கை சஸ்பெண்ட் செய்து குளித்தலை சப்-கலெக்டர் சேஷத்ரிமயும் தீபி சானு உத்தரவிட்டுள்ளார்... சிட்டா பெறுவதற்காக விண்ணப்பித்த விவசாயியின் குடும்பத்தினரிடம் நடந்ததாக கூறப்படும் இந்த உரையாடல், மீன் வறுவல் முதல் "கவர்மென்ட்ல சம்பளம் தரவில்லையா?" என்ற கேள்வி வரை இப்போது இணைவாசிகளிடம் பேசுபொருளாகியுள்ளது.

    English Summary

    Karur VAO Asked Fish Fry for Chitta.. What Did the Farmer’s Son Ask the Government Officer?