கரூரில் கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை.. தண்டவாளத்தில் தலையை கொடுத்த என்ஜினியர்

  • கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ரயில் முன் பாய்ந்து என்ஜினியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் செய்தார். திருமண வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனை வந்தததால் இந்த முடிவினை என்ஜினியர் தேடிக்கொண்டதாக முதற்கட்ட விசாரணை தகவல்களில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    திருமண வாழ்க்கை என்பது சிலருக்கு இனிமையாகவும், பலருக்கு கசப்பாகவும் அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் திருமணமான புதிதில் ஏற்படும் பிரச்சனைகளை சரியாக கையாள தெரியாததது தான் காரணம். அதிகப்படியான எதிர்பார்ப்பு, பெண் வீட்டார் தலையீடு, கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை இன்மை என பல்வேறு விவகாரங்கள் காரணமாக இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால் தவறான முடிவெடுக்கிறார்கள். கரூர் மாவட்டம் குளித்தலையில் அப்படி நடந்துள்ளது.

    Advertisement

    கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மூத்த மகன் அரவிந்த்குமாருக்கு 30 வயது ஆகிறது. இவர் என்ஜினியர் ஆவார். அரவிந்த் குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது உறவுக்கார பெண் மோனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மோனிஷா எம்.பி.பி.எஸ். முடித்து, தற்போது புனேயில் தங்கி மேல்படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அரவிந்த்குமார், மோனிஷா ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்த்குமார் மனவேதனையில் இருந்து வந்தாராம். நேற்று அதிகாலை 2 மணி அளவில் அரவிந்த்குமார் குளித்தலை ரயில் நிலைய அருகே சென்றார். அப்போது கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரயில் முன்பு அவர் திடீரென பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    Advertisement

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக என்ஜினியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரியில் விபரீதம்

    காதலிக்குமாறு கூறி, பள்ளி மாணவியை தற்கொலைக்கு துாண்டிய, 18 வயது கல்லுாரி மாணவரை, சூளகிரி போலீசார் கடந்த இரண்டு நாள் முன்பு கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, எம்.தொட்டியைச் சேர்ந்த பவித்ரா என்ற மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்குமுன்பு வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரித்தனர்.

    Advertisement

    அதில் ஓசூரில், தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு படிக்கும், குரும்ப குட்டையைச் சேர்ந்த, 18 வயது மாணவர், காதலிப்பதாக கூறி, பவித்ராவுக்கு தொல்லை கொடுத்தாராம். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான, 17 வயது வாலிபரும், பவித்ராவிடம், அந்த மாணவனை காதலிக்குமாறு கூறி, வற்புறுத்தியுள்ளார். இதில், மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா, உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுதுத அவரது உறவினர்கள், சூளகிரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அதன்பின்னர் போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர்.

    தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வல்ல! உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

    Advertisement

    மத்திய அரசு ஹெல்ப்லைன் (கிரண்): 1800-599-0019

    மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணி நேரம்)

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 (24 மணி நேரம்)

    English Summary

    Marital problems in Karur: The wrong decision made by the Kulithalai engineer at railway station in midnight