இறுகும் பிடி.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு!

  • கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கரூர் சென்றிருந்தார். அதற்கு முன்னதாகவே செந்தில் பாலஜியை கைது செய்துவிட வேண்டும் என்று தவெக அரசு தீவிரம் காட்டியதாகவும், ஆனால் முன்ஜாமீன் பெற்றதால்.. கைது செய்ய முடியவில்லை என்றும்.. எனவே இப்போது கைது செய்ய ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Advertisement

    கரூர், மண்மங்கலம் அடுத்துள்ள செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள அவரது பூர்வீக வீடு, தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி, திமுக தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் ஆகியோர்களது வீடு, கோதைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்தி, அதிபர் ரமேஷ் வீடு என 5 இடங்களில் ஐந்து குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    41 இடங்களில் ரெய்டு

    இது தவிர, டாஸ்மாக் முறைகேடு புகாரின் அடிப்படையில் சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி என 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.

    Advertisement

    மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, சரியான பில் கொடுக்காமல் கொள்முதல் செய்ததால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது 41 இடங்களில் ரெய்டு மெற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    செந்தில் பாலாஜி பேட்டி

    மூத்த முன்னாள் அமைச்சர் பலர் மீது வழக்கு தொடுப்பதில் இந்த அரசு மும்முரமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை மடியில் கனம் இல்லை.. எனவே வழியில் பயமில்லை! சோதனைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். இப்போது வரை நான் ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன்.

    English Summary

    Senthil Balaji Raid: Anti-corruption police have conducted surprise raids at five locations, including the Karur residence of former Minister Senthil Balaji and the homes and offices of his close associates.