கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியை, மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் 4 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வாயை மூடி புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக, பல்வேறு பகுதிகளில் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.