சித்தினு நினைக்கல.. தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் போலீஸிடம் ஆடிட்டே உண்மையை சொன்ன கிருஷ்ணகிரி நபர்

  • கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, குடும்பத்துக்கு பில்லி, சூனியம் உள்ளிட்ட செய்வினை வைத்ததாக சித்தி மீது சந்தேகம் கொண்ட இளைஞர், மதுபோதையில் அவரது வீட்டுக்குள் புகுந்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், தேன்கனிக்கோட்டையில் அந்த சம்பவ அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை.

    Advertisement

    கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. இவரது மனைவி சரசம்மா (50). கூலித் தொழிலாளியான இவர், கணவருடன் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தார். சிவப்பாவின் அண்ணன் சோமப்பாவின் மகன் அசோக் (27). இவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    Advertisement

    தேன்கனிக்கோட்டை சித்தி

    அசோக்கிற்கு அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதுடன், சலூன் கடையிலும் சமீபகாலமாக வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து நஷ்டமும், உடல்நல பாதிப்பும் இருந்ததால், ஜோதிடம் பார்த்துள்ளார்.. அப்போது அசோக் குடும்பத்துக்கு யாரோ செய்வினை வைத்திருப்பதாக ஜோதிடர் சொல்லியிருக்கிறார்..

    உடனே தன்னுடைய சித்தி சரசம்மாதான், குடும்பத்துக்கு தொடர்ந்து பில்லி, சூனியம் உள்ளிட்ட செய்வினை செய்துவிட்டார் என்று அசோக் சந்தேகப்பட்டுள்ளார்.. இதுதொடர்பாக சரசம்மாவின் குடும்பத்தினரிடம் அசோக் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் 2 குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    Advertisement

    கிருஷ்ணகிரி போதை நபர்

    இந்த நிலையில், நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்த அசோக், ஆத்திரத்துடன் சரசம்மாவின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது சிவப்பாவும் சரசம்மாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பிய அசோக், "எதுக்காக எனக்கு செய்வினை வைத்தாய்" என்று கேட்டு, மறுபடியும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், போதை மண்டைக்கேறிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரசம்மாவின் கழுத்தை அறுத்து விட்டார்.. இதில் பலத்த காயமடைந்த சரசம்மா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பஸ் ஸ்டாண்டு போலீஸ்

    இதன்பிறகு அசோக் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.. நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற அவர், அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று, "என் சித்தியை கொன்னுட்டேன் சார்" என்று சொல்லி சரணடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    தகவல் கிடைத்ததும் தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சரசம்மாவின் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காபக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக அசோக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்துக்கு செய்வினை வைத்ததாக சித்தி மீது கொண்ட சந்தேகம், தொடர்ந்து நடந்த தகராறு, மதுபோதையில் ஏற்பட்ட ஆத்திரம் என அடுத்தடுத்து நடந்த சம்பவம் கண்டகானப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!!

    English Summary

    Denkanikottai Government Bus Stand.. Krishnagiri Man Breaks Down and Tells Police the Truth