ஓசூர் ஏர்போர்ட்டிற்கு சவாலாகும் ஆந்திரா, கர்நாடகா.. அமைச்சருக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?

  • கிருஷ்ணகிரி: ஒசூர், கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சியை முடக்கும் வகையில் அதற்கு அருகிலேயே புதிய விமான நிலையத்தை அந்திர அரசு அமைக்க முயற்சி செய்வதாக திமுக எம்.எல்.ஏ கூறிய தகவலுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அளித்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் விமான நிலையத்திற்கு எதிராக ஆந்திரா, கர்நாடகா இருப்தாகவும், குப்பத்தில் ஏர்போர்ட், பெங்களூரில் இரண்டாவது ஏர்போர்ட் பிளான்கள் எல்லாருக்கும் தெரியும் போது, அமைச்சர் கீர்த்தனாவிற்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்று டேக் செய்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement

    சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசன் பேசும் போது, ஆந்திர மாநில முதல்வர் ஒன்றிய அரசுடன் மிகவும் நெருக்கமாக உள்ளதால் அங்கு புதிய விமான நிலையம் வர உள்ளது. அதேபோன்று கர்நாடக மாநில முதல்வரும் அங்கு புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், ஓசூரில் விமான நிலையம் வராமல் போய்விடும்.அதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அறிவிக்கப்பட்டுள்ள விமான நிலையம் விரைவில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Advertisement

    அப்போது தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சமூகவலைதளத்தில் வரும் செய்தியெல்லாம் பார்த்துவிட்டு குற்றச்சாட்டாக கூறக்கூடாது. ஆதாரம் இல்லாமல் சட்டப்பேரவையில் எதுவும் கூறக்கூடாது என்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள். ஆதாரம் இல்லாமல் கூறவில்லை என்று குமுறுகிறார்கள். நெட்டிசன்கள் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் என்பது தமிழ்நாடு எல்லையில் உள்ள மாவட்டம் ஆகும். இந்த பக்கம் ஆந்திரா, அந்த பக்கம் கர்நாடகா ஆகியவை உள்ளன. ஓசூரில் இருந்து கூப்பிடும் தூரத்தில் தான் ஆந்திராவின் குப்பம் நகரம் இருக்கிறது. அதேபோல் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவும் இருக்கிறது.

    இதில் பெங்களூர் விமான நிலையம் என்பது ஓசூரில் இருந்து கொம்பே கவுடா விமான நிலையம் சுமார் 75 முதல் 80 கிமீ தூரத்தில் இருக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் ஆகிறது. எனவே புதிய விமான நிலையத்தை ஓசூரில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ஓசூரில் விமான நிலையம் அமைத்தால், அது பெங்களுரின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதி மக்களுக்கு வரமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பல நிறுவனங்கள் ஓசூரில் நிறுவனங்களை தொடங்க விரும்புவார்கள்.

    Advertisement

    இதனால் பெங்களுரின் முதலீடு ஓசூருக்கு போய்விடும் என்று அம்மாநில அரசு அஞ்சுகிறது. அதனால் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் பெங்களூருவுக்கு இரண்டாவது விமான நிலையத்தை ஓசூர் பக்கத்தில் அமைக்க திட்டமிடுகிறது. இது ஒருபறம் எனில், ஆந்திராவில் குப்பம் தொகுதி என்பது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. அங்குமே ஓசூர், பெங்களூர் தொழில் முதலீடுகளை குறிவைத்து விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்துப்பட்டும் விட்டன. இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவது கேள்விக்குறியாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    Advertisement

    ஒசூர், கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சியை முடக்கும் வகையில் அதற்கு அருகிலேயே புதிய விமான நிலையத்தை ஆந்திர அரசு அமைக்க முயற்சி செய்வதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், "ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டது என்ற சாமானிய மக்களுக்கு தெரிந்த தகவல் கூட தொழில்துறை அமைச்சருக்கு தெரியவில்லையா ? ஆந்திரா அரசு விமான நிலையத்த கட்டி முடிச்ச அப்புறமும் நம்ம அமைச்சர் இப்படித்தான் ஆதாரம் கேட்டுட்டே இருப்பாங்க போல. கூடுதல் தகவல் - கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் கீர்த்தனா தான்" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஓசூருக்கு அருகில் விமான நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பது அவரைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அவரோ தொழில் துறை அமைச்சர், ஆனால் அவருக்கே இது தெரியவில்லையா? இப்போது அதற்கான ஆதாரத்தைக் கேட்கிறாரா? நம்பவே முடியவில்லை.

    அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஓசூருக்கு அருகில் விமான நிலையங்களை அமைக்க ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகள் எவ்வளவு தீவிரமாகப் போட்டியிடுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்; ஆனால் நம் அரசோ அப்படிச் செய்வதில்லை. இவ்வளவு முக்கியமான விஷயம் பற்றி அவருக்குத் துளியும் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மூன்றாவது நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "அமைச்சர் கீர்த்தனா அவர்கள் என்ன பேசுகிறார், அதைவிட முக்கியமாக எப்படிப் பேசுகிறார் என்பதில் அவருக்குத் தெளிவே இல்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தமிழ்நாட்டின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றை நிர்வகிக்கும் ஒருவர் இந்த லட்சணத்தில் செயல்படுவதைப் பார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக அவரது செயல்பாடுகளும் பொதுவெளியில் அவர் பேசிய பேச்சுகளும் இந்த கவலைகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

    தொழில் துறையைச் சிறப்பாக வழிநடத்தக்கூடிய பல திறமையான அமைச்சர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையில், மாநிலத்தின் தொழில் துறை எதிர்காலம் சரியான நபரின் கையில்தான் உள்ளதா என்பதை அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்குத் தேவையானது திறமை, தெளிவு மற்றும் நம்பகத்தன்மைதானே தவிரக் குழப்பம் அல்ல." இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Are Andhra and Karnataka posing a challenge to the Hosur airport? How did Minister Keerthana alone remain unaware of this? Everyone knows how actively the governments of AP and Karnataka are vying to build airports near Hosur to attract more investment, unlike our government. And she has no clue about it, shocking.