கிருஷ்ணகிரி: காவல்துறையினர் மீது பயமில்லாமல் எதுவும் செய்யலாம் என்கிற நிலை உள்ளது. பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது இதுதான் 100 நாள் சாதனை. முதல்வர்கள் ஆட்சி செய்த நிலையில், விஜய் ஜோசியர்களை கேட்டு அறையை மாற்றுகிறாரோ என்னவோ? என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னால் அமைச்சர் கேபி முனுசாமி. மேலும், 100 நாள் ஆட்சி மக்களுக்கான திட்டங்கள் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றி வெற்றி என வைப்பது தான் சாதனை எனவும் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் புதிய நகைக்கடையை திறந்து வைத்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தவெக 100 நாள் ஆட்சியை அனைத்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள்.. ஆட்சிக்கு முன்பு வாக்குறுதிகள் அளித்தனர்.
அதனால் 10% வாக்குகள் விழுந்தது. வெற்றிக்கு காரணமே வாக்குறுதி தான். அதை நிறைவேற்றினார்களா என்றால் இல்லை. கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மாதந்தோறும் பெண்களுக்கான தொகையை வழங்கினர். தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கான ஊக்கதொகை என வழங்கவில்லை.. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்கிற அறிவிப்பு குளறுபடியாக உள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. இவர் அறிவித்த அறிவிப்புக்கும் செயல்பாடுக்கும் தொடர்பு இல்லை. கோவையில் மாணவன் கொலை செய்யப்படுகிறான்.. பெற்றோர் போதை பொருட்கள் தகவல் அளித்த தகவலால் கொலை என்கிறார்கள். ஆனால் அமைச்சர் இருதரப்பு சண்டை என்கிறார்கள். பெற்றோரின் கருத்து உண்மை என்றால் அமைச்சர் போதை பொருட்கள் விற்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றுதான் பொருள். தஞ்சையில் இளைஞரை போலிசார் தள்ளிவிட்டு அடிக்கிறார். இளைஞரும் அடிக்கிறால். காவல்துறையினர் மீது பயமில்லாமல் எதுவும் செய்யலாம் என்கிற நிலை உள்ளது. பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது இதுதான் 100 நாள் சாதனை. முதல்வர்கள் ஆட்சி செய்த நிலையில், விஜய் ஜோசியர்களை கேட்டு அறையை மாற்றுகிறாரோ என்னவோ? 10 மாடி உள்ள அலுவலகம் நெரிசல் உள்ள இடம். அலுவலகத்தை புதுப்பிக்க டெண்டர் விடாமல் 90% முடிந்த பிறகு டெண்டர் விடுகிறார்கள். 100 நாள் ஆட்சி மக்களுக்கான திட்டங்கள் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றி வெற்றி என வைப்பது தான். சிங்கப்பெண் சிறப்புப் படை என உருவாக்கி சீறுடை வழங்கியதோடு நிற்கிறது. எந்த பகுதியிலும் பணிகள் நடக்கவில்லை, அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளது.. இந்த ஆட்சி 100 நாளில் 1யை நீக்கினால் மீதி உள்ளது தான் இதற்கான மதிப்பு." என்றார்.கேபி முனுசாமி
காவல்துறை
100 நாள் சாதனை
சிங்கப்பெண் சிறப்புப் படை