Arabian Dates: கிருஷ்ணகிரியில் விளையும் அரேபியன் டேட்ஸ்! ஒரு கிலோ ரூ 200! அசத்தும் விவசாயி ஈஸ்வரன்!

  • கிருஷ்ணகிரி: அரபு நாட்டில் விளையும் பேரிச்சையை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் சாகுபடி செய்து அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ஈஸ்வரன். இதன் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடிக்கு போதுமான வருமானம் இல்லாததால் தற்போது அரபு நாடுகளில் விளைவிக்கப்படும் பேரிச்சை சாகுபடியிலும் விவசாயிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Advertisement

    அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தவளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் தக்காளி, நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்து வந்துள்ளார்.

    எதிர்பார்த்தப்படி லாபம் கிடைக்காததால் மாற்று பயிர் ஏதாவது சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் தான் அரபு நாட்டில் இருந்து பேரிச்சை செடிகளை வாங்கி இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்துள்ளார்.

    எதிர்பார்த்தப்படி நன்கு வளர்ந்து பேரிச்சை மரத்தில் கொத்து கொத்தாக பேரிச்சைப்பழத்தின் விளைச்சலை கண்டு விவசாயி ஈஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார். ஒரு கிலோ பேரிச்சம்பழம்
    ரூ.200-க்கு வியபாரிகள் கொள்முதல் செய்ய முன் வருவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

    Advertisement

    மேலும் விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காததால் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி அரபு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பேரிச்சை செடிகளை
    இரண்டு ஏக்கர் நிலத்தில் நடவு செய்து மூன்றாவது ஆண்டில் இருந்து பேரிச்சம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால்
    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பேரிச்சை கொத்து,கொத்தாக அதிக விளைச்சல் கண்டு உள்ளது.

    ஒவ்வொரு குலைகளிலும் 10 கிலோ முதல் 20 கிலோ வரை உள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் இருப்பதால் பல்வேறு இடங்ககளில் இருந்து வியாபாரிகள் ரூ.200 க்கு கொள்முதல் செய்யத் தயாராக இருப்பதாகவும், இதனை
    வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் பேரிச்சை சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்கிறது.

    Advertisement

    ஆகையால் இது போன்ற மற்ற விவசாயிகளும் பணப் பயிர்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார். இதே போல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் டிராகன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    English Summary

    A farmer Eswaran successfully cultivated Arabian dates at low costs and gets high profits.