கிருஷ்ணகிரி அரசு புது பஸ் ஸ்டாண்டில் தூங்கிய 4 பேர்! பையில் இருந்ததை கண்டு அதிர்ந்த போலீஸ்.. ஏன்

  • கிருஷ்ணகிரி: ஒரு கொள்ளையை நடத்துவதற்கு முன்பே அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பல வழிகளை யோசித்திருக்கிறார்கள். கைரேகை பதிவாகக் கூடாது, சிசிடிவியில் முகம் தெரியக்கூடாது, யாராவது பிடிக்க வந்தாலும் தப்பித்துவிட வேண்டும் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி திட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனால், இத்தனை திட்டங்களையும் தீட்டிய 4 பேரும், கடைசியில் ஒரேயொரு சின்ன தவறு செய்துவிட்டார்கள்.. அது என்ன தெரியுமா?

    Advertisement

    கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டில் நகர போலீசார், வழக்கம்போல இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருப்பு உடை அணிந்த 4 இளைஞர்கள் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    Advertisement

    கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டு

    அவர்களைப் பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரிடமும் விசாரித்தனர். அப்போது தாங்கள் ஓசூரிலிருந்து போச்சம்பள்ளி செல்வதற்காக டூவீலரில் வந்தோம் என்று சொல்லி உள்ளனர்.. ஆனால், அவர்களது போலீசாருக்கு குழப்பத்தை தந்தது..

    போச்சம்பள்ளி செல்ல வேண்டியவர்கள், பஸ் ஸ்டாண்டில் எதுக்காக கருப்பு உடையில் படுத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு, அவர்களிடமிருந்த பையை சோதனை செய்தனர்.. அதில், முகமூடி, கிளவுஸ்கள், மயக்க மருந்து, சிரிஞ்ச், லேசர் லைட், பூச்சிக்கொல்லி மருந்து, ஆசிட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. பிறகு 4 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    Advertisement

    ஊத்தங்கரை தாலுகா

    அப்போது அவர்கள் 4 பேரும், ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள கொரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிங்காரவேலன், போச்சம்பள்ளி அருகே உள்ள மலையாண்டஅள்ளியைச் சேர்ந்த கல்கி, இளம்பருதி, விமல் என்பது தெரியவந்தது. இந்த 4 பேரில் சிங்காரவேலன், கல்கி ஆகியோர் வாடகை வாகன ஓட்டுநர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    இளம்பருதி தருமபுரியில் உள்ள கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2ம் வருடமும், விமல் மொரப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 2ம் ஆண்டும் படித்து வருகிறார்கள்.. இவர்கள் 4 பேருமே சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டது தற்போது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    சினிமா பாணியில் திட்டம்

    ஆனால், கொள்ளை அடித்த பிறகு, போலீசாரிடம் சிக்காமல் எப்படி கொள்ளையடிப்பது என்று சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களை பார்த்து, அதன்படி திட்டங்களை தீட்டினார்களாம். குறிப்பாக கொள்ளையடிக்க செல்லும்போது கைரேகைகள் பதிவாகாமல் இருக்க கிளவுஸ்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடிகளை அணியவும், யாராவது பிடிக்க முயன்றால் கத்தியைக் காட்டி மிரட்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள்..

    அதுமட்டுமல்லாமல், யாராவது பிடிக்க வந்தால் அவர்களுக்கு மயக்க மருந்தை செலுத்துவதற்காக ஊசியையும் தயார் செய்து வைத்துள்ளார்கள்..

    நைட் நேரத்தில் 4 பேர்

    நைட் நேரத்தில் யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கருப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வது என்றும், சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை மறைக்க கருப்பு ஸ்பிரே பெயிண்ட்டையும் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பிளான் செய்முள்ளனர்.. முக்கியமாக, தங்களுக்குள் ரகசியமாக சைகை கொடுத்துக்கொள்ள லேசர் லைட்டையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    Advertisement

    இதில் ஹைலைட் என்னவென்றால், கொள்ளையடிப்பதற்கு முன்பு, அந்தந்த பகுதிகளில் ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர்களைப் போல உடை அணிந்து, உணவு விநியோகம் செய்வது போல் முக்கியமான பகுதிகளில் சுற்றித் திரிந்து நோட்டமிட்டுள்ளனர்... கடைசியாக, ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அந்தப் பகுதியில் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்கள்... இப்படி கொள்ளையடிக்கும் முன்பேயே, இந்த 4 பேரும் போட்டிருந்த இந்த மாஸ்டர் பிளான்தான் போலீசாரையே வியக்க வைத்தது.

    ஆனால், இந்த 4 இளைஞர்களும், கிருஷ்ணகிரி போலீசாரின் இரவு ரோந்துப் பணியின்போது தூங்கிக் கொண்டிருந்தபோது சிக்கி கொண்டுவிட்டனர்.. இப்போது இவர்கள் மீது கொள்ளை முயற்சி தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    English Summary

    Krishnagiri New Bus Stand.. 4 Young Men Found Asleep, Police Shocked by What Was Inside Their Bag.. What Happened?