நிலம் விற்ற பணத்தோடு ஆண் நண்பருடன் ஓட்டம்.. 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு.. என்னாச்சு தெரியுமா?

  • கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் வட்டத்திற்குட்பட்ட கும்ளாபுரம் கிராமத்தை உலுக்கியெடுத்த ஒரு கொடூர படுகொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,, இது சம்பந்தமான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. ஆனால், கள்ளக்காதல் ஏற்படுத்திய விபரீதம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மொத்தமாக சீரழித்துள்ளது.

    Advertisement

    கூலித் தொழிலாளியாக கஷ்டப்பட்டு தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர் நாராயணசாமி.. 39 வயதாகிறது.. இவரது மனைவி வித்யாவுக்கு 30 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    Advertisement

    வித்யாவின் காதல்

    தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது.. ஆனால், திடீரென வித்யாவின் மனம் தடுமாறி விட்டது.. அதே ஊரைச் சேர்ந்த கார்பெண்டர் புனித் என்பவருடன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அறிமுகமாகி உள்ளார்.. அப்போதிருந்தே அவருடன் வித்யாவுக்கு ரகசியத் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்து கணவன் கொந்தளித்து போனார்.. மனைவியை கண்டித்தார்.. அட்வைஸ் செய்தார். எதையுமே வித்யா கேட்கவில்லை.

    கணவனின் எச்சரிக்கைகளையும், கண்டனங்களையும் மீறி வித்யா செயல்பட்டார்.. கள்ளக்காதலை கைவிட முடியாது என்று கறாராகவும் சொல்லிவிட்டார்.. இதனால் செய்வதறியாது தவித்த நாராயணசாமி, இந்த விஷயத்தை வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சொன்னார்.. பிறகு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்து வரையும் கொண்டு சென்றார். அப்போதும் வித்யா கள்ளக்காதலை கைவிடவில்லை.

    Advertisement

    கள்ளக்காதலனுடன் ஓட்டம்

    நாளுக்கு நாள், தன்னுடைய மகிழ்ச்சிக்கு தடைகள் வருவதையும், ஆளாளுக்கு அட்வைஸ் தருவதையும் வித்யா விரும்பவில்லை.. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட விரும்பினார் வித்யா.. ஆனால் அதற்கு முன்பாக நாராயணசாமி பெயரில் வைத்திருந்த 8 சென்ட் நிலத்திலிருந்து, 1,500 சதுர அடி நிலத்தை வித்யா சாமர்த்தியாக பேசி, அதை தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டார்.

    அத்துடன் அந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த அம்ரீஷ் என்பவரிடம் பேசி ரூ.22 லட்சத்திற்கு விற்றுள்ளார். அந்த பணத்தை வாங்கி கொண்டு, குடும்பத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, பெற்ற 3 குழந்தைகளையும் மறந்து, தனது கள்ளக்காதலன் புனித்துடன் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதிக்குத் தப்பியோடி தலைமறைவாகி விட்டார்..

    Advertisement

    தங்களது 3 குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் சேர்த்து வைத்த சொத்து ஒரே நாளில் கைமாறியதுடன், மனைவியும் மாயமானதால் நாராயணசாமி அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.

    நிலம் விற்ற பணம்

    இந்நிலையில், நேற்று மதியம், கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள வங்கிக்கு வித்யா மீண்டும் வந்துள்ளார். அங்குள்ள தனது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வித்யா பேங்குக்கு வந்திருந்தார்.. இந்த விஷயம் நாராயணசாமிக்கு எப்படியோ தெரிந்து விட்டது.

    உடனடியாக வங்கிக்கு சென்ற நாராயணசாமி, நிலம் விற்ற பணத்தையும் எஞ்சிய சொத்துக்களையும் உடனடியாக குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.

    Advertisement

    விரட்டி விரட்டியே கொன்ற நாராயணசாமி

    நடுரோட்டில் தம்பதி இருவருமே சண்டை போட்டுக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடங்காத நாராயணமி, பெரிய கல்லை எடுத்து நாராயணசாமி வித்யாவை தாக்கியுள்ளார். கணவனின் இந்த ஆவேச தாக்குதலை பார்த்து பயத்தில் உறைந்த வித்யா, அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

    ஆனால் விடாமல் துரத்திய நாராயணசாமி, வித்யாவின் தலை, முகம், கால்கள் என உடம்பெல்லாம் அந்த பெரிய கல்லால் தாக்கினார்.. இதனால் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்த வித்யா, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது...

    Advertisement

    திணறிய தேன்கனிக்கோட்டை

    தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, வித்யாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாகவும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..

    தலைமறைவாக முயன்ற நாராயணசாமியை சுற்றி வளைத்து கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். நிலத்தை விற்று கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதும், நிலம் விற்ற பணத்துக்காக மனைவியே கல்லால் அடித்து கொல்லப்பட்டதும், தேன்கனிக்கோட்டையை திணறடித்து வருகிறது.. தாய் தகப்பன் இல்லாமல் அந்த 3 குழந்தைகளும் கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.. இந்த நாசமாய் போன கள்ளக்காதல் இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க போகிறதோ?!!

    English Summary

    Wife Ran Away With Her Lover After Selling Land.. Leaving 3 Children Behind.. What Happened in Krishnagiri