லண்டன்: அரச குடும்பப் பின்னணி.. மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் உதவித்தொகை.. இப்படி வசதியான வாழ்க்கை வாழும் 32 வயது மஹ்ரா அல் நஹ்யான், லண்டன் தெருவில் சுயநினைவின்றி கிடந்த சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பக்கத்திலேயே 3 வயது குழந்தை செருப்புகள் கூட இல்லாமல் தனியாக நின்றிருந்தது.,. அடுத்து நடந்ததுதான் இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளது..!!
அபுதாபி அரச குடும்பத்துடன் திருமண உறவில் இருந்தவர் மஹ்ரா அல் நஹ்யான் (32)... கடந்த ஜூன் 13ம் தேதி மேற்கு லண்டனில் உள்ள ஒரு பிஸியான தெருவில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.. அவருக்கு அருகிலேயே இன்னொரு ஆணும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அந்த இடத்தில் 3 வயது குழந்தை ஒன்று, செருப்பு இல்லாமல் அங்கிருந்த ஸ்கூட்டருடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது... அது பரபரப்பான சாலை என்பதால், வாகனங்கள் பல சென்று கொண்டிருந்தன.. இதைப் பார்த்து பொதுமக்கள் பதறிப்போனார்கள். பிறகு திடீரென அந்த குழந்தை, காற்றில் பறந்து சென்ற ஒரு காகிதத்தை பின்னாடியே துரத்திக்கொண்டு சாலையை நோக்கி ஓடியுள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவர் ஓடிச்சென்று குழந்தையை தடுத்து பாதுகாத்துள்ளார்.. அப்போதுதான் குழந்தை யாருடையது என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது, மஹ்ரா சுயநினைவின்றி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனே பொதுமக்கள் அனைவரும் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோதும் மஹ்ராவுக்கு போதை தெளியவில்லை.. சுமார் 30 நிமிடங்கள் அவர் சுயநினைவின்றி இருந்தாராம்.. ஒருகட்டத்தில் நினைவு திரும்பியதும், தன்னைச் சுற்றி நின்றிருந்தவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று கேட்டாராம் மஹ்ரா. உடனடியாக அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.. போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான பொருட்கள் அவரிடம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சட்டவிரோத போதைப்பொருள் எதுவும் அவரிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மஹ்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டீபன் வுல்லோ கேசி, "மஹ்ராவுக்கு மாதாந்திர உதவித்தொகை 8,000 பவுண்டுகள் வழங்கப்படுகிறது (இது நம்முடைய இந்திய மதிப்பில் பல லட்சம் ரூபாயாகும்)... சம்பவம் நடந்த நாளில் மஹ்ரா போதைப்பொருள் எடுத்துக்கொள்ளவில்லை, அதற்கு முந்தைய நாட்களில் கோகைன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட களைப்பால்தான், ரோட்டில் மயங்கி விட்டார்.. மஹ்ரா கடந்த ஜூலை மாதம் முதல் சர்ரே பகுதியில் உள்ள பிரையரி சிகிச்சை மையத்தில் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சேர்ந்த பிறகு போதைப்பொருள் பயன்படுத்தவில்லை, சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள உறுதியாக இப்போதும் இருக்கிறார்" என்று விளக்கம் தந்தார். இதையடுத்து நீதிபதி தன்னுடைய உத்தரவில், "குழந்தை வாகனங்கள் நிறைந்த சாலையை நோக்கி ஓடியிருக்கிறது.. பொதுமக்கள் தலையிடாமல் இருந்திருந்தால் குழந்தை கடுமையாக காயமடைந்திருக்கலாம், காணாமல் போயிருக்கலாம் அல்லது வேறு யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம்.. எனவே இந்த வழக்கில் மஹ்ரா அல் நஹ்யானுக்கு 6,114 பவுண்டுகள் அபராதம் விதித்ததுடன், போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி 2 ஆண்டுகள் சமூக நலப் பணிகளில் கட்டாயம் ஈடுபட வேண்டும் போதைக்கு அடிமையான அபுதாபி அரச குடும்பத்து பெண், ரோட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்து, கோர்ட்டில் தண்டனை பெற்றது, உலக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது..!!லண்டன் தெருவில் அபுதாபி அரச குடும்ப பெண்
சுயநினைவின்றி விழுந்து கிடந்து..
8000 மாதாந்திர உதவித்தொகை
நீதிபதி தந்த தண்டனை