பிரிட்டனில் விஜய்யை பார்க்க திரண்ட கூட்டம்.. முண்டியடித்த ரசிகர்கள்! லண்டனில் நிகழ்ச்சி ரத்து

  • லண்டன்: அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் பிரிட்டன் சென்றிருக்கிறார். நேற்று லண்டனில் பொது நிகழ்ச்சி ஒன்றில் விஜய் பங்கேற்க இருந்த நிலையில், கட்டுக்கடங்காமல் கூட்டம் அதிகரித்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால், லண்டன் காவல்துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து, விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார். இதனால் அவரை பார்க்க வந்து.. பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த லண்டனின் மிக உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ஹோட்டல் வளாகத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் திரண்டனர். விஜய் ரசிகர்கள் திரண்ட பகுதிக்கு மிக அருகிலேயே லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையமும், ஒரு முக்கியமான மருத்துவமனையும் அமைந்துள்ளன.

    ரசிகர்களின் கூட்டம் ஹோட்டல் வழியை ஆக்கிரமித்ததால், பொதுமக்களின் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மருத்துவமனைக்கான அவசர சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் சூழல் உருவானது. கூட்ட நெரிசலால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருதிய லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறை, இந்த திடீர் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

    Advertisement

    காவல்துறையின் உத்தரவை தொடர்ந்து, முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அவரது குழுவினர் மைக் மூலம், "பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும், முறையான போலீஸ் அனுமதி இல்லாததாலும் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. தயவு செய்து அனைவரும் கலைந்து செல்லுங்கள்" என்று அறிவித்தனர். விஜய்யை பார்ப்பதற்கும், அவருடன் செல்ஃபி எடுப்பதற்கும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தமிழ் மக்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

    பல மணி நேரம் காத்திருந்தும், விஜய்யை பார்க்க முடியவில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இருப்பினும் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு சரியானதுதான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    ரசிகர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டாலும், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பொருளாதார பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. லண்டன் பயணத்தின்போது தமிழ்நாட்டில் மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப துறைகளை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ரூ.12,300 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 9,400 பேருக்கு உயர்தர வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    English Summary

    London event featuring CM Vijay cancelled: Chief Minister Vijay has traveled to Britain to attract foreign investments. An event in London, in which Vijay was scheduled to participate yesterday, was cancelled due to an uncontrollable surge in the crowd.