அஜித்திற்காக முதல்வர் விஜய் செல்லும் லண்டன் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்கயூட்.. F1 பாதையின் வரலாறு

  • சென்னை: லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சில்வர்ஸ்டோனில் உள்ள உலக புகழ்பெற்ற மோட்டார் ரேசிங் சர்க்கயூட்டை பார்வையிடுகிறார். அங்கு அஜித் பங்கேற்கும் கார் பந்தய போட்டியை விஜய் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் செல்லும் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்கயூட் F1 காலெண்டரிலேயே மிகவும் அதிவேகமான பாதையாகும். அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை முன்னெடுத்து செல்லும் வகையில், லண்டன் செல்லும் முதல்வர் விஜய் அங்குள்ள முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, சில்வர்ஸ்டோனில் உள்ள புகழ்பெற்ற மோட்டார் ரேசிங் சர்க்கயூட்டை விஜய் பார்வையிட இருக்கிறார்.

    Advertisement

    இந்தநிலையில் சில்வர்ஸ்டோனில் நாளை (சனிக்கிழமை) தொடங்கவுள்ள 'மிச்சிலின் லீ மென்ஸ் கார்' பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை மிச்சிலின் லீ மென்ஸ் போட்டிக்கான நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த போட்டி தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது அணி சார்பில் கலந்து கொள்கிறார். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தனது நண்பரான அஜித்தின் கார் ரேஸ் போட்டியை தொடங்கி வைக்க இருப்பது சமூக வலைதளங்களில்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய் செல்லும் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்கயூட் எப்1 ரேஸில் எவ்வளவு புகழ் பெற்றது. அதன் விவரங்களை பார்ப்போம்.

    Advertisement

    சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்கயூட் என்பது கார்களுக்காகவே பிரத்யேமாக உருவாக்கப்பட்ட பாதை எல்லாம் ஆரம்பித்தில் கிடையாது. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் விமானப் படை பயன்படுத்திய ஒரு விமான நிலையமாம் தான் இது. போருக்குப் பிறகு 1948ம் ஆண்டில் அப்படியே கைவிடப்பட்ட விமான நிலையம் தான் பின்னாளில் ரேஸ் பாதையாக மாற்றப்பட்டது.

    முதல் F1 ரேஸ் என்பது 1950 மே 13 அன்று நடைபெற்ற உலகின் முதல் அதிகாரப்பூர்வ ஃபார்முலா 1 (F1) உலக சாம்பியன்ஷிப் ரேஸ் இந்த சில்வர்ஸ்டோன் பாதையில்தான் நடந்திருந்தது. தற்போதைய F1 பாதையின் நீளம் 5.891 கி.மீ என்று சொல்கிறார்கள். இதில் மொத்தம் 18 வளைவுகள்/திருப்பங்கள் இருக்கின்றன.

    Advertisement

    F1 காலெண்டரிலேயே மிகவும் அதிவேகமான பாதைகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக Maggotts, Becketts, மற்றும் Chapel ஆகிய வளைவுகளில் கார்கள் அசுர வேகத்தில் திரும்புவது பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும் என்று கார் பந்தயத்தில் ஆர்வமுள்ள ரசிகர்கள் கூறுகிறார்கள். 2020 பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன் 1 நிமிடம் 27.097 வினாடிகளில் இந்த சுற்றை கடந்ததே அதிகாரப்பூர்வ சாதனையாக இருக்கிறது. F1 பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் தவிர, மோட்டோ ஜிபி (MotoGP - பைக் ரேஸ்) மற்றும் பிற சர்வதேச மோட்டார் விளையாட்டுப் போட்டிகளும் இங்கு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போது போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளார். அதனை அவரது நண்பரும், முதல்வருமான விஜய் தொடங்கி வைக்கிறார்.

    English Summary

    The London Silverstone Racing Circuit—where Chief Minister Vijay is heading for Ajith: A history of the F1 track.