கட்டிப்பிடித்து முத்தம்.. 16 வயது மாணவருடன் உடலுறவு.. 30 வயது பெண் ஆசிரியை கைது! என்ன நடந்தது

  • லண்டன்: பிரிட்டன் நாட்டில் பள்ளி படிக்கும் மாணவருடன் உடலுறவு கொண்டதாக 30 வயது உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பள்ளி மாணவரை காதல் என்ற பெயரில் ஏமாற்றி அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.

    பொதுவாக மாணவர்களை ஆசிரியர்கள் தான் நல்வழிப்படுத்த வேண்டும். தவறு செய்யும் மாணவர்களை திருத்தும் பல ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சில நேரங்களில் ஆசிரியர்களே மாணவர்களிடம் எல்லை மீறும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இங்கிலாந்தில் நடைபெற்றது.

    உடலுறவு

    இங்கிலாந்தில் 16 வயது மாணவருடன் உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 30 வயது உடற்கல்வி ஆசிரியர் பிரோன்வென் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு இப்போது நடந்து வருகிறது. அவர் சவுத்தாம்ப்டனில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியபோது இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேம்ஸ் மறுத்துள்ளார்.

    அங்குள்ள வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர், "மாணவர் முதலில் ஜேம்ஸை ஸ்னாப் சாட்டில் நட்பு பட்டியலில் சேர்க்க முயன்றுள்ளார். ஆனால், அதை ஜேம்ஸ் நிராகரித்துள்ளார். பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று கொண்டு இருக்கிறார். இதையடுத்து இருவரும் மெசேஜ் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.

    என்ன நடந்தது

    முதலில் அந்த மெசேஜ்கள் எல்லாம் நார்மலாகவே தொடங்கியுள்ளது. பிறகு காதலாக மலர்ந்த அது, பாலியல் ரீதியான மெசேஜ்களாகவும் மாறியுள்ளது. பின்னர் இருவரும் காரில் முத்தமிட்டு கொண்டனர்" என்றார். மற்றொரு சந்தர்ப்பத்தில், டென்னிஸ் போட்டியை டிவியில் போட்டுவிட்டு, இருவரும் முத்தமிட்டு கொண்டு, பாலியல் உறவில் ஈடுபட்டதாக அரசு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    மேலும், பாலியல் உறவு மூலம் அந்த மாணவரை ஜேம்ஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மாணவரை காதலிப்பதாகவும், இருவரும் சேர்ந்து வேறு இடத்துக்கு சென்றுவிடலாம் என்றெல்லாம் கூறியதாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் முதலில் ஆசிரியர் - மாணவர் என்றே பேச ஆரம்பித்தாலும் அது பிறகு எல்லை மீறியதாகவும் மாணவரை பாலியல் ஆசை மூலம் ஆசிரியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

    வாக்குமூலம்

    அந்த மாணவரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இந்த உறவு தனக்கு நல்லது போல இருந்ததாகவும் தனது விருப்பத்திற்கு உட்பட்டே எல்லாம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், கொஞ்ச காலத்திற்கு பிறகே தான் திட்டமிட்டு இந்த உறவுக்குள் இழுக்கப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஜேம்ஸ் சவுத்தாம்ப்டனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டது உட்பட மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஜேம்ஸ் மறுத்துள்ளார். நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    English Summary

    30-year-old PE teacher in England has been accused of having a relationship with a 16-year-old student(மாணவருடன் உடலுறவு கொண்ட ஆசிரியை கைது): UK news in tamil.