லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றிருக்கிறார் முதலமைச்சர் விஜய். இந்நிலையில் இன்று பிரிட்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தின் போட்டியை விஜய் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
இன்று காலை 9.45 மணியளவில், 'லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன்' கார் பந்தயம் பிரிட்டனில் நடைபெற்றது. இதில்தான் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். இந்த போட்டியைதான் விஜய் தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் 'லீ மேன்ஸ்' அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
சென்னையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கார் பந்தயம் நடத்தப்பட்டிருந்தது. தவெக ஆட்சியில் இதைவிட பெரியதாக சாதிக்க வேண்டும் என்கிற யோசனை விஜய்க்கு இருந்தது. இதைதொடர்ந்துதான் உலகத்தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' தமிழகத்தில் அமைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். சட்டமன்றத்தில் இதை 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். தற்போது அஜித் பங்கேற்கும் போட்டியை தொடங்கி வைத்துள்ளார்.