எங்களால் பிரிந்து வாழ முடியாது.. கேமராமேனை ஒரே நேரத்தில் திருமணம் செய்த 3 சகோதரிகள்.. அடக்கெடுமையே

  • லக்னோ: 3 சகோதரிகள் பிரிந்து வாழ முடியாது என்று ஒரே நேரத்தில் கேமராமேன் ஒருவரை திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தசரத மன்னன் 3 திருமணம் செய்தாரே. அதுபோல் தான் இதுவும் என்று அந்த சகோதரிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜ் (வயது 20). இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். ஒருவரின் பெயர் சாவித்ரி (19). இன்னொருவரின் பெயர் சந்தோஷ் (18). இவர்கள் 3 பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் அளவுக்கடந்த பாசம் வைத்துள்ளனர்.

    Advertisement

    இவர்களுக்கு ஒன்று சேர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களை வீடியோ எடுக்கும் கேமராமேன்னாக இருப்பவர் விகாஷ் என்ற விக்கு. இந்நிலையில் தான் கேமராமேன் விகாசை, ஒரே நேரத்தில் 3 சகோதரிகளும் திருமணம் செய்துள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் 3 சகோதரிகளின் கையை பிடித்து விகாஷ் அக்னியை 7 முறை சுற்றி வருகிறார். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் நெற்றிலும் தனித்தனியே குங்குமம் வைக்கிறார். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் விகாஷின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

    Advertisement

    இந்த வீடியோவை பார்த்த இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 3 பேரும் ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது சட்டத்துக்கு புறம்பானது. இந்திய இந்து திருமண சட்டப்படி அது குற்றம் என்று கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு 3 சகோதரிகளும் அசரவில்லை.

    மாறாக விமர்சனம் செய்பவர்களை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். ''பழங்காலத்தில் அயோத்தி மன்னர் தசரதன் 3 பேரை திருமணம் செய்து இருக்கிறார். அவருக்கு மூன்று அரசிகள் இருந்தனர். தசரதன் மன்னன் அப்படி இருக்கும்போத அது அவமதிப்பாக கருதப்பட்டதா.. இல்லையே'' என்று கூறியுள்ளனர்.

    Advertisement

    மேலும் விகாசை எதற்காக 3 பேரும் சேர்ந்து திருமணம் செய்தனர்? என்ற கேள்விக்கும் அந்த சகோதரிகள் பதிலளித்துள்ளனர். இதுபற்றி அவர்கள், ''''நாங்கள் சின்ன வயதில் இருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். எங்களால் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வாழ முடியாது. ஆனால் எங்களின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்தால் நாங்கள் பிரியும் சூழல் வரும். இதனால் தான் நாங்கள் கேமரா மேன் விகாசை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்களின் விருப்பத்தை விகாசிடம் கூறியபோது அவரும் ஏற்றுக்கொண்டார். இதில் எந்த தவறும் இல்லை'' என்று நியாயப்படுத்தினர்.

    English Summary

    Three sisters, unwilling to live apart, married the same cameraman simultaneously. Following the release of a video of the event, the sisters faced severe criticism; they hit back by pointing out that King Dasharatha had married three times, arguing that their situation is no different.