துரந்தர் 2 ஞாபகம் இருக்கா! போலீஸ் முன் கொல்லப்பட்ட கேங்ஸ்ட்டர் அத்திக் அகமது மகன் கார் விபத்தில் பலி

  • லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசியல்வாதியாகவும், கேங்ஸ்டராகவும் வலம் வந்த அத்திக் அகமது போலீஸ் கண்முன்னே சுட்டு கொல்லப்பட்டு இருப்பார். அதுபோன்ற காட்சி துரந்தர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தான் அத்திக் அகமதுவின் மகன் அப்பான் அகமது இன்று கார் விபத்தில் பலியானார்.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் இன்று காலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் பயணித்த 2 பேர் துடிதுடித்து இறந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    Advertisement

    காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இறந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களின் பின்னணி பற்றி விசாரிக்கப்பட்டது.

    இதில் இறந்தவர்களின் பெயர்கள் சோனு என்பதும், இன்னொருவரின் பெயர் அபான் அகமது என்பதும் தெரியவந்தது. இதில் அபான் அகமது யார் என்றால் உத்தர பிரதேசத்தை மிரட்டிய அரசியல்வாதியும், 'கேங்ஸ்டருமான' அத்திக் அகமது என்பவரின் மகன் ஆவார். இதுபற்றி போலீசார் கூறுகையில், ''கேங்ஸ்டர் அத்திக் அகமதுவின் கடைசி மகன் அபான் அகமது ஜான்சி சிறையில் உள்ள தனது சகோதரரை பார்க்க சென்றார். அப்போது அவர் கார் விபத்தில் பலியாகி விட்டார்'' என்று கூறினர்.

    Advertisement

    அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான 'துரந்தர் 2 திரைப்படத்தில் கூட நடிகர் சலீம் சித்திக், அதிஃப் அகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆயுதம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கள்ளநோட்டு கடத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் இந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கும். அதோடு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு கொண்டு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கும். இந்திய உளவுத்துறை அவரை சுட்டு கொன்றதாக திரைப்படத்தில் மறைமுகமாக காட்டப்பட்டு இருக்கும்.

    உண்மையிலேயே உத்தரபிரதேசத்தில் 'கேங்ஸ்டர்' ஆக வலம் வந்த அத்திக் அகமதுவும் போலீஸ் கண்முன்னே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பார். இதனால் தான் 'துரந்தர் 2 ' படத்தின் அதிஃப் அகமது என்பவரின் கதாபாத்திரம் உண்மையில் அத்திப் அகமதுவை சித்தரிப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. இதற்கு சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் அத்திக் அகமது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்தவர். இவர் மீது மொத்தம் 160 கிரிமினல் வழக்குகள் இருந்தன.

    Advertisement

    கடந்த 2005ம் ஆண்டில் ராஜூ பால் என்பவரை கடத்திய வழக்கில் அத்திக் அகமது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அத்திக் அகமது 2023ல் ஏப்ரலில் தனது மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது போலீஸ் கண்முன்னே அவரை 3 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    அத்திக் அகமதுவிற்கு மொத்தம் 5 மகன்கள். மூத்த மகன் பெயர் உமர் அகமது. இவர் லக்னோ சிறையில் உள்ளார். 2வது மகன் பெயர் அலி அகமது. இவர் ஜான்சி சிறையில் உள்ளார். அதேபோல் 3வது மகன் பெயர் அசாத். இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் போலீஸ் கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். 4வது மகன் பெயர் அசாம். இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடைசி மகன் அபான் அகமது தான் இன்று கார் விபத்தில் பலியானர். இவர் தனது 2வது அண்ணனான அலி அகமதுவை ஜான்சி சிறையில் பார்க்க போனபோது விபத்தில் சிக்கி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Atiq Ahmed, who was a politician and gangster in Uttar Pradesh, was shot dead right before the eyes of the police-a scene reminiscent of one featured in the movie Durandhar 2. Amidst this backdrop, Atiq Ahmed's son, Appan Ahmed, died in a car accident today.