17,000 அடி உயரத்தில் நேர்ந்த கதி.. இண்டிகோ விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்.. 110 பேர் திக்திக்

  • லக்னோ: பாட்னாவில் இருந்து லக்னாவிற்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் வானில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் பைலட் சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கியதால் அதிர்ஷ்டவசமாக 110 பேர் தப்பினர்.

    Advertisement

    பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிற்கு இன்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. இண்டிகோ 6E925 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் மொத்தம் 104 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று மொத்தம் 110 பேர் பயணித்தனர்.

    Advertisement

    இந்த விமானம் லக்னோவை நெருங்கி கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் விமானம் தரையிறங்க வேண்டிய நிலையில் திடீரென்று விமானத்தின் மீது மின்னல் தாக்கியது.

    இதில் விமானத்தின் முன்பகுதி (மூக்கு பகுதி) பலத்த சேதமடைந்தது. விமானத்தை மின்னல் தாக்கியது பற்றி அறிந்த பைலட்டுகள் உடனடியாக லக்னோ விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவசரமாக விமானத்தை தரையிறக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து திட்டமிட்டதை விட 8 நிமிடங்கள் முன்பாக இண்டிகோ விமானம் பத்திரமாக லக்னோ விமான நிலையத்தியல் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Indigo Flight: An IndiGo flight was en route from Patna to Lucknow when it was suddenly struck by lightning while flying at an altitude of 17,000 feet. Although the front section of the aircraft was damaged, the pilot skillfully landed the plane, and fortunately, all 110 people on board escaped unharmed.