இதுதான்யா போட்டி.. அயோத்தி தொகுதியில் எதிரெதிரே களமிறங்கும் யோகி ஆதித்யநாத் - அகிலேஷ் யாதவ்?

  • லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாவ் ஆகியோர் களமிறங்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் இருவரும் மாறி மாறி சவால் விடுத்து வரும் நிலையில் அயோத்தி சட்டபை தொகுதியில் எதிரெதிரே போட்டியிட உள்ளனரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வரும் நிலையில் 3வது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    மறுபுறம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இழந்தை செல்வாக்கை மீட்டு எப்படியாவது ஆட்சியை பாஜகவிடம் இருந்து பறித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு கிடைத்த வெற்றி அகிலேஷ் யாதவிற்கு சட்டசபை தேர்தலில் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனால் அவரும் தற்போது தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே தான் யோகி ஆதித்யாத் - அகிலேஷ் யாதவ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் வேட்பாளராகலாம். அதேபோல் சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் தான். இதற்கிடையே தான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பாக பாஜகவின் அரசியலுக்கு முக்கிய இடமாக உள்ள அயோத்தி ராமர் கோவில் அமைந்து இருக்கும் அயோத்தி சட்டசபை தொகுதியை மையப்படுத்தி இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 8 ம் தேதி அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், ''அயோத்தி சட்டசபை தொகுதியின் வேட்பாளராக சமாஜ்வாதி சார்பில் பவன் பாண்டே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்க்க பாஜக புதிய வேட்பாளரை தேடி வருகிறது'' என்றார்.

    இதற்கு யோகி ஆதித்யநாத் கடந்த 10ம் தேதி பதிலளித்தார். பால்ராம்பூர் பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ''அகிலேஷ் ஜி. நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். நீங்கள் அயோத்தியில் வேட்புமனு தாக்கல் செய்தால் நானும் அங்கு போட்டியிடுகிறேன். இருவரும் அயோத்தியில் போட்டியிட்டு யாருக்கு 'லக்' இருக்கிறது என்பதை பார்க்கலாம்'' என சவால் விடுத்தார்.

    Advertisement

    இதற்கு மீண்டும் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர், ''தேர்தலில் போட்டியிடுவது பற்றி சவால் விடுக்கும் யோகி ஆதித்யநாத் முதலில் தனக்கான டிக்கெட்டை உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தில் எங்களுக்கு சாதகமாக வீசும் காற்றில் இந்த முறை முரட்டுத்தனமானவர்களை அடித்து சென்றுவிடும்'' என்று கூறியுள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கடந்த 2024 ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த கோவில் திறந்த பிறகு முதல் முறையாக 2024ல் ஏப்ரல் 10 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அயோத்தி சட்டசபை தொகுதி என்பது பைஜாபாத் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும்.

    Advertisement

    இதனால் நிச்சயம் இந்த தொகுதியில் பாஜக தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. பாஜக வேட்பாளராக களமிறங்கிய சிட்டிங் எம்பி லாலு சிங்கை 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வீழ்த்தினார்.

    இந்நிலையில் தான் தற்போது அயோத்தி சட்டசபை தொகுதியை மையப்படுத்தி யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது யோகி ஆதித்யாத் கோரக்பூர் நகர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.

    அகிலேஷ் யாதவ் கனாஜ் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். இதற்கு முன்பு 2022ல் அகிலேஷ் யாதவ் கார்ஹல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்காததால் அவர் 2024 லோக்சபா தேர்தலி்ல கனோஜ் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அதன்பிறகு கார்ஹல் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ் மீண்டும் மாநில அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. உத்தர பிரதேச முதல்வர் பதவியை மனதில் வைத்து அவர் சட்டசபை தேர்தலில் களமிறங்கலாம். இது நடக்கும் பட்சத்தில் யோகி ஆதித்யநாத் - அகிலேஷ் யாதவ் ஆகியோர் அயோத்தி தொகுதியில் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்குவார்களா? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Yogi Adityanath and Akhilesh Yadav are gearing up to enter the fray once again as Chief Minister candidates in the Uttar Pradesh Assembly elections. Amidst the challenges they have been trading with each other, there is now immense anticipation regarding whether they will face off directly in the Ayodhya Assembly constituency.