வானில் இருந்து திடீரென்று விழுந்து நொறுங்கிய விமானம்.. பயணித்த 2 பைலட்டுகளும் பலியான சோகம்

  • லக்னோ: உத்தர பிரதேசத்தில் பயிற்சி விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் 2 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர்.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் கான்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்க் ஏவியேஷன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் விமானிகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று மதியம் கான்பூர் அருகே கங்கை நதிக்கரை பகுதியில் இன்று மதியம் Tecnam P2006T எனும் பயிற்சி விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 2 பைலட்டுகள் இருந்தனர். ஒருவர் பயிற்சி பைலட். இன்னொருவர் பைலட் + இன்ஸ்ட்ரக்டர் ஆவார்.

    வயல்வெளியின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் நாடுபுர்வா கிராமத்தில் விழுந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 2 பேரும் பலியாகினர். உயிரிழந்த பைலட்டில் ஒருவர் குஜராத்தை சேர்ந்தவர். இவர் 3 ஆயிரம் மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். துணை பைலட் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்களின் பெயர் உள்பட பிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    Advertisement

    சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர், விமான துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. விபத்துக்கான காரணம் தொடர்பாக டிஜிசிஏ விசாரணையை தொடங்கி உள்ளது. விபத்தில் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,''உயிரிழந்தவரகளின் ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவர்களது குடும்பத்தினர் பெறவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    முன்னதாக Tecnam P2006T பயிற்சி விமானத்தில்பயணித்த டெல்லியை சேர்ந்த பெண் விமானி கான்பூர் கார்க் ஏவியேஷன பயிற்சி தளத்தில் தரையிறங்கியபோது ப்ரோபெல்லர் தாக்கியதில் காயமடைந்தார். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது அந்த வகையான பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் 2 பைலட்டுகள் பலியாகி உள்ளனர்.

    English Summary

    A training aircraft was flying in the sky over Uttar Pradesh. Suddenly, the aircraft lost control and crashed into a field. Both pilots tragically lost their lives in the incident.