“இதுதான் சான்ஸ்.. முடிச்சிடலாம் வாங்க!” அகிலேஷ் யாதவுடன் கூட்டணிக்கு தயார்! முன் வந்த ஓவைசி

  • லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க தயார் என்று அசாதுதீன் ஓவைசி அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை, கடந்த 2017ம் ஆண்டு முதல் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் அடுத்த ஆண்டு மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

    Advertisement

    ஓவைசி சொன்னது என்ன?

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில்.. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அடித்து ஆடியிருந்தது. இந்நிலையில் இக்கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க தயார் என்று ஏஐஎம்ஐஎம்(AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்திருக்கிறார். இந்த ஆதரவு மூலம் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

    மொரதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் அகிலேஷ் யாதவுடன் கை கோர்க்க, கூட்டணி வைக்க ரெடி. தேர்தல் முடிந்த பின்னர் புலம்பி பிரயோஜனம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    உத்தரப் பிரதேசத்தின் நிலை

    உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2017 சட்டமன்ற தேர்தலுக்கும் 2022 தேர்தலுக்கும் இடையில் பாஜக சில மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.

    • 2017 தேர்தலில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. வாக்கு சதவிகிதம் 39.67%
    • 2022 தேர்தலில் 255 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. வாக்கு சதவிகிதம் 41.29%

    அதாவது தொகுதிகள் குறைந்திருந்தாலும் வாக்கு சதவிகதம் அதிகரித்திருக்கிறது. இது 2027 தேர்தலில் பாஜக இன்னும் வெற்றி வாய்ப்புடன்தான் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

    ஆனால், நாடாளுமன்ற தேர்தல்கள் என்று எடுத்துக்கொண்டால்.. கதையே வேறு! பாஜக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

    Advertisement
    • 2019 தேர்தலில் 62+2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. வாக்கு சதவிகிதம் 49.98%
    • 2024 தேர்தலில் 33+2+1 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. வாக்கு சதவிகிதம் 43.69%

    எனவே பாஜகவை வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவை வீழ்த்தலாம் என்று ஓவைசி கணக்கு போடுகிறார். அதனால் ஏற்கெனவே பலமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சியை கூட்டணிக்கு அழைக்கிறார்.

    English Summary

    Owaisi: Assembly elections are set to be held soon in Uttar Pradesh. Amidst this, Asaduddin Owaisi has announced his readiness to support the alliance led by Akhilesh Yadav in the election.