Sorry அப்பா.. 50 முறை முயன்றும் அரசு வேலை கிடைக்கவில்லை.. தங்கப்பதக்கம் வென்ற இளைஞர் சோக முடிவு

  • லக்னோ: இன்ஜினியரிங் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் அரசு பணியை பெற 50 முறை முயன்றார். ஆனால் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில் மனவருத்தம் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அந்த இளைஞர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் அனைவரையும் கலங்க வைத்தது.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 23). இவர் பிடெக் படிபபை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் புரோகிராமிங் படிப்பை முடித்திருந்தார். கல்லூரியில் சிறப்பாக படித்து முதலிடம் பிடித்ததற்காக தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அதோடு உத்தர பிரதேச மாநில அளவில இன்ஜினியரிங் பிரிவில் 3வது இடம் பிடித்து அசத்தியிருந்தார்.

    Advertisement

    கல்லூரி படிப்பை முடித்த ஆனந்த், அரசு வேலைக்கு தயாராகி வந்தார். இதற்காக பல்வேறு அரசு பணிக்கான தேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
    இந்நிலையில் தான் ஆனந்தின் அண்ணனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆனந்தின் குடும்பத்தினர் பீகாருக்கு சென்றிருந்தனர். ஆனந்த் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் தான் ஆனந்த் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் பிணமாக தொங்கினார். வீட்டில் வேலை பார்க்கும் நபர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைநது ஆனந்த் உடலை கைப்பற்றினர்.

    Advertisement

    அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், ''என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்துவிட்டேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. இதனால்என்னை மன்னித்து விடுங்கள்'' என்று எழுதி வைத்திருந்தார். இதன்மூலம் ஆனந்த் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

    அதாவது ஆனந்த் அரசு வேலை பெற வேண்டும் என்ற கனவில் இருந்தார். இதனால் கல்லூரி படிப்பை முடித்தவர் தனியார் துறையில் வேலைக்கு செல்லாமல் அரசு பணிக்கான தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசு தேர்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வந்தார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மனவருத்தத்தில் அவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Advertisement

    இதுபற்றி ஆனந்தின் தந்தை ராஜ்குமார் கூறுகையில், ''என் மகன் ரயில்வே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கிகள் மற்றும் கல்வித்துறைக்கான தேர்வுகளை எழுதி வந்தார். இப்போது அவன் இல்லை'' என்று கூறி கதறி அழுதார்.

    English Summary

    An engineering gold medalist made 50 attempts to secure a government job. However, after facing repeated failures, he became deeply distressed and died by hanging himself. A heart-wrenching letter left behind by the young man moved everyone deeply.