தூங்கி கொண்டிருந்த மீரட் கணவர்.. பாம்புடன் வந்த மனைவி? ரூ.20 லட்சம் LIC பின்னணி! அதிர்ச்சி திருப்பம்

  • லக்னோ: ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை வளைத்துப்போட்டு... கள்ளக்காதலனுடன் சொகுசாக வாழ ஆசைப்பட்ட பள்ளி ஆசிரியை ஒருவர், பெற்ற பிள்ளையையும் மறந்து விட்டு... தன்னுடைய தகப்பன் என்பதையும் உதாசீனம் செய்துவிட்டு... கட்டின புருஷனை விஷப்பாம்பை விட்டு கடிக்க வைத்துக் கொன்றே விட்டார்.. இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வலம் வந்து அதிர வைத்து கொண்டிருக்கிறது.. இப்போது இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

    Advertisement

    மீரட்டின் ஹஸ்தினாபூர் பகுதியை சேர்ந்தவர் அதுல் பன்வார் (35). தாமினி என்ற பெண்ணை காதலித்தது கடந்த 2019ல் கல்யாணம் செய்து கொண்டார்.. தாமினிக்கு இப்போது 30 வயதாகிறது.. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

    Advertisement

    மீரட் தம்பதி

    கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் "கிட்ஸ் பிளே ஸ்கூல்" என்ற ஒரு தனியார் பள்ளியை தொடங்கி நடத்தி வந்தனர். எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அந்த பள்ளியின் வேன் டிரைவர் துஷார் என்கிற நிக்கி உள்ளே நுழையும் வரை!

    நாளடைவில் தாமினிக்கும் டிரைவர் துஷாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் ஒருகட்டத்தில் எல்லையை தாண்ட, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளனர். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த கணவன் அதுலைத் தீர்த்து கட்ட முடிவு செய்தார்கள்.. அத்துடன் அதுல் பெயரிலிருந்த ரூ.20 லட்சம் எல்ஐசி இன்சூரன்ஸ் பணத்தையும் அபகரிக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டனர்.

    Advertisement

    வேன் டிரைவர் சோனு

    இதற்காக சோனு, உதய்குமார் என்ற 2 பாம்பு பிடிப்பவர்களை வாடகைக்கு அமர்த்தினார்கள்.. இன்சூரன்ஸ் பணம் வந்ததுமே அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக டீல் பேசி, அட்வான்ஸாக 15 ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, கணவன் அதுலுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார் தாமினி.

    அதை குடித்துவிட்டு மயங்கி விழுந்ததும், நள்ளிரவில் கள்ளக்காதலன் துஷார் அந்த பாம்பு பிடிப்பவர்களோடு வீட்டிற்குள் புகுந்துள்ளார். அவர்கள் கொண்டு வந்த கொடிய விஷம் கொண்ட சுருட்டைப் பாம்பை (Krait) அதுலின் படுக்கையிலேயே அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

    Advertisement

    சுருட்டை பாம்பு ஏவி கணவனை கொன்று...

    மறுநாள் காலையில், கணவன் இறந்துவிட்டதாக கதறி அழுதார் தாமினி.. பெட்ரூமுக்குள் புழுக்கம் அதிகமாக இருந்தால் தானும், தன் மகனும் வெளியே தூங்கியதாகவும், காலையில் கணவருக்கு டீ கொடுக்க ரூமுக்குள் போனபோதுதான் அவர் இறந்து கிடந்ததாகவும் அழுது துடித்தார்.

    இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தார்கள். ஆனால் அதுல் உடம்பில் ஆங்காங்கே பாம்பு கடித்த தழும்புகள் இருந்ததை கண்டு, அதிர்ந்தனர்.. அதனால் இது ஏதோ தற்செயலான பாம்புக்கடி மரணம் என்றே அடித்து சொன்னார்கள்.. இதைக்கேட்டதுமே அதுலின் அப்பா கொந்தளித்து விட்டார்.. எப்படி பாம்பு ரூமுக்குள் வரும்? என்று சந்தேகப்பட்டு, மகனின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய முடிவு செய்தார்.

    Advertisement

    ட்விஸ்ட் தந்த மாமனார்

    ஆனால் இந்த ட்விஸ்ட்டை தாமினி எதிர்பார்க்கவில்லை.. போஸ்ட் மார்ட்டம் வேண்டாம் என்று தடுத்தார்.. மருமகளின் எதிர்ப்பையும் மீறி போஸ்ட் மார்டடம் செய்தே தீருவது என்று அதுலின் அப்பா ஒற்றைக் காலில் நின்று அதை செய்து முடித்தார். இறுதியில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. மற்றொருபுறம் தாமினியின் செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன.. அப்போதுதான் மொத்த உண்மையும் அம்பலமானது.

    தாமினி விசாரணை வளையத்துக்குள் சென்றார்.. அதுல் மீது பாம்பு ஏவி விடுவதற்கு முன்பேயே அதாவது 20 நாட்களுக்கு முன்பேயே, அதுல் மீது காரை ஏற்றி விபத்து மூலம் துஷார் கொல்ல முயன்றாராம்.. ஆனால், அதுல் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அப்போது உயிர் தப்பியிருக்கிறார்.

    Advertisement

    நச்சுப்பாம்பு தாமினி

    எனினும், தனக்கு நேர்ந்த விபத்து குறித்து அதுல் போலீஸில் புகார் தர முயன்றாராம். ஆனால், தாமினி, போலீசாரிடம் போகக்கூடாது என்று அதுலை தடுத்து விட்டாராம். இதற்கு பிறகுதான் பாம்பை ஏவி கொல்வது என்று முடிவு செய்துள்ளனர்..

    இப்போது அந்த நச்சுப் பாம்பு தாமினி, அவரது கள்ளக்காதான் துஷார் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கம்பிகளுக்கு பின்னால் தள்ளியுள்ளனர். காதலித்து கரம் பிடித்த கணவனை இன்சூரன்ஸ் பணத்திற்காகப் பாம்பை விட்டுக் கொன்ற இந்த சம்பவம் ஒட்டுமொத்த மீரட்டையே நடுங்க வைத்துள்ளது...!!!

    English Summary

    Wife Kills Sleeping Husband With Snake for ₹20 Lakh LIC Insurance? Affair Shocks Meerut