அந்தரங்க உறுப்பில் சூடுபோட்ட ஆசிரியை.. அலறிய 5 வயது மாணவன்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

  • லக்னோ: 5 வயது சிறுவன் தனது சீருடையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவனது பிறப்புறுப்பில் கத்தியை வைத்து சூடுபோட்ட சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பண்டேபூர் பகுதியை சேர்ந்தவர் கேசரி ஜெய்ஸ்வால். இவர் வழக்கறிஞர் ஆவார். இவரது மகனுக்கு 5 வயது ஆகிறது. இவன் பண்டேபூரில் உள்ள ஷரின் சோனி ப்ளே ஸ்கூலுக்கு சென்று வருகிறான்.

    Advertisement

    இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். பள்ளி முடிந்து மீண்டும் மாணவன் வீட்டிற்கு வந்தான். அப்போது அவன் தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தனது தாயிடம் கூறினார்.

    பிறப்பிறுப்பில் கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி மாணவனிடம் அவரது தாயார் விசாரித்தார். அப்போது கத்தியை சூடுசெய்து ஆசிரியை ப்ரீத்தி சூடுவைத்ததாக கூறி மாணவன் அழுதான். இதுபற்றி உடனடியாக மாணவனின் தந்தை கேசரி ஜெய்ஸ்வாலுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் பள்ளிக்கு போன் செய்து சம்பவம் குறித்து கேட்டார். ஆனால் பள்ளி நிர்வாகம் அவருக்கு சரியாக பதிலளிக்கவில்லை.

    Advertisement

    இதனால் கோபமான கேசரி ஜெய்ஸ்வால் தன்னுடை மகன் மற்றும் பிற மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது பள்ளியில் மாணவன் சிறுநீர் கழிக்க அனுமதி கோரியுள்ளான். ஆனால் ஆசிரியை ப்ரீத்தி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மாணவன் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான். இதனால் கோபமான ஆசிரியை அனைத்து மாணவர்கள் முன்பு அவனை திட்டி தாக்கியதோடு, தனி அறைக்கு மாணவனை அழைத்து சென்று கத்தியை சூடுசெய்து அந்தரங்க உறுப்பில் சூடு போட்டது தெரியவந்துள்ளது. இதுபற்றி மாணவனின் தந்தை கேசரி ஜெய்ஸ்வால் சார்பில் லால்பூர் - பண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளி ஆசிரியை ப்ரீத்தி, பள்ளியின் முதல்வர் உள்பட பிற நிர்வாகிகள் மீ வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆசிரியை ப்ரீத்தி, பள்ளி நிர்வாகிகளுக்கு எதிராக பிஎன்எஸ் சட்டப்பிரிவு 115 (2) (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல்), 118 (1) (ஆபத்தான ஆயுதம் வைத்து காயம் ஏற்படுத்துதல்), 351 (2) (குற்றம் சார்ந்து மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. . தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5ம் வகுப்பு மாணவன் ஆடையில் சிறுநீர் கழித்ததால் கோபமாகி அவனது அந்தரங்க உறுப்பிலேயே கத்தியை வைத்து ஆசிரியை சூடுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''இந்த சம்பவம் மிகவும் வலி நிறைந்தது. கொடூரமானது. இது குழந்தையின் எதிர்காலத்தையே பாதிக்க கூடியது. இதனால் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். இதில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்மாணவர்களிடம் ஒவ்வொரு ஆசிரியர்களும் அமைதியாகவும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    A shocking incident has come to light in which a teacher, enraged because a five-year-old boy had urinated in his uniform, branded the child's private parts with a heated knife.