மனைவியின் அந்தரங்க உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற சைக்கோ.. ஷாக் காரணம்

  • லக்னோ: சொந்த நிலத்தை விற்பனை செய்ய மறுத்த மனைவியின் அந்தரங்க உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேச மாநிமல் ராம்பூரை சேர்ந்தவர் இஸ்ரார். இவரது மனைவி பெயர் நஸ்ரின். இவர்கள் 2 பேருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

    Advertisement

    இந்த தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நஸ்ரின் பெயரில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கணவர் இஸ்ரார் முடிவு செய்தார்.

    இதுபற்றி நஸ்ரினிடம் கூறினார். ஆனால் நஸ்ரின் ஒப்புக்கொள்ளவில்லை. ஏழை குடும்பமாக இருப்பதாலும், 4 மகள்கள் + ஒரு மகன் உள்ளதால் அவர்களின் எதிர்கால தேவைக்காக இந்த நிலத்தை வைத்திருப்பதாக கூறினார். இந்த நிலத்தை இப்போது விற்றுவிட்டால் நாளை தனது மகன், மகள்களின் எதிர்காலம் பாதிக்கும் என்று நினைத்தார். இதனால் நிலத்தை விற்பனை செய்ய நஸ்ரின் மறுத்துவிட்டார்.

    இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் இஸ்ரார் தனது மனைவி நஸ்ரினை அடித்து துன்புறுத்தி வந்தார். அதோடு நிலத்தை விற்பனை செய்யாவிட்டால் கொலை செய்வதாகவும் மிரட்டி வந்தார். இதற்கிடையே தான் நஸ்ரின் வீட்டில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவரது உடலில் காயங்கள் இருப்பதும், கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

    Advertisement

    நஸ்ரினின் அந்தரங்க உறுப்புகளில் மின்சார ஷாக் கொடுத்து துன்புறுத்தி கொன்று இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி இஸ்ராரை கைது செய்தனர். நிலத்தை விற்பனை செய்யவில்லை என்று மனைவியின் அந்தரங்க உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் அங்குள்ளவர்களை திடுக்கிட வைத்துள்ளது.

    இதுபற்றி நஸ்ரின் சகோதரி ஹசீன் ஜாஹன் கூறுகையில்,''என்னுடைய சகோதரியின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளது. ஆனால் அதனை அவள் எங்களிடம் இருந்து மறைத்துவிட்டார். வீட்டுக்கு வந்தபோது கூட அதுபற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அவளது முகத்தில் இருந்த காயத்தை பார்த்து கேள்வி கேட்டதற்கு அவள் சமாளித்துவிட்டாள். தனது கணவனின் கொடுமையை மறைத்து வாழ்ந்த நிலையில் இன்று இறந்துவிட்டாள்'' என்று கதறி அழுதார்.

    Advertisement

    இதுபற்றி ராம்பூர் கூடுதல் சூப்பிரண்டு அனுராக் சிங் கூறுகையில், ''நஸ்ரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கரண்ட் ஷாக்' கொடுத்ததற்கான காயங்கள் உடலில் பல இடங்களில் .ள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 6 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் கரண்ட் ஷாக் காயங்களும் அடங்கும். அவரது அந்தரங்க உறுப்பிலும் கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்ராரின் குடும்பத்தினர் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

    English Summary

    An incident in which a man brutally murdered his wife-torturing her by administering electric shocks to her private parts after she refused to sell her own land-has left everyone shocked.