ஆதவ் அர்ஜுனா பாடி லேங்குவேஜ் பார்த்தீங்களா? ஓபனா பெயரை சொல்லியே வெளுத்த ஆர்பி உதயகுமார்

  • மதுரை: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிடும் வீடியோக்களும், கொடுக்கும் பேட்டிகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி விட்டு வருகின்றன. தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார், மதுரையில் அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் அதன் அமைச்சர்களை மிகக் காரசாரமாக சாடியுள்ளார். அவரது இந்த பேட்டியை அதிமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    கூட்டணி அமைத்த சில நாட்களிலேயே, விஜய் தலைமையிலான கூட்டணி உடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தாவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

    ஆர்பி உதயகுமார்

    அதேசமயம், தவெக தயவால் எம்பியான பிரவீண் சக்கரவர்த்தி, செல்வப்பெருந்தகையை "யார் அவர்?" என்று கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இன்னொருபுறம் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை இலக்கு வைத்து உதயகுமார் சரமாரியாக பாய்ந்துள்ளார். பொது வாழ்க்கைக்கு எந்த தராதரமும் இல்லாமல், அதிர்ஷ்டத்தால் மட்டுமே ஆதவ் அர்ஜுனா அமைச்சராகியிருப்பதாகக் கடுமையாகச் சாடினார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி தோற்றிருப்பார்

    ஆர்பி உதயகுமார் பேசும்போது, "மதுராந்தகம் தொகுதியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியே தோற்றிருப்பார் என்று பேசியது ஆணவத்தின் உச்சம்.. எடப்பாடி பழனிசாமி 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றவர் என்பதையும், தமிழகத்தில் 47 தொகுதிகளில் தவெகவை எதிர்த்துத்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்ற அடிப்படை உண்மையைக் கூட அறியாமல் அவர் பேசுகிறார்

    அடிப்படை உண்மை தெரியாத அரைவேக்காட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை நாம் என்ன சொல்வது? இவரது அரசியல் பயணம் அப்படி. திமுகவிலிருந்து விரட்டப்பட்டு, பிறகு, திருமாவளவன் காலை, கையை பிடித்து விசிகவில் சேர்ந்து, அங்கிருந்தும் விரட்டப்பட்டார். அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார். அதிமுக விசுவாசத் தொண்டர்களுக்குத்தான் பதவி தரும் என்ற அரசியல் இலக்கணத்தை எடப்பாடி பழனிசாமி கற்றுக் கொடுத்தார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனா பாடி லேங்குவேஜ்

    பிறகு விஜய்யிடம் அடைக்கலமாகி, இன்றைக்கு அதிர்ஷ்டத்தால் அமைச்சராகி, வாய்க்கு வந்ததையெல்லாம், ஒரு தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைப்போல பேசி வருகிறார்

    இப்போது தியாகி போலப் பேசி வருகிறார்.. அவரது உடன்பாடற்ற உடல்மொழியும் பேச்சுமுறையும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.. தவெகவை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு ஆதவ் அர்ஜுனா போட்டுள்ள ரகசியத் திட்டம் பற்றி நாட்டு மக்களுக்குத் தெரியும், விஜய் அவரை விரட்டி அடித்தால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்" என்று காட்டமாக கூறியிருக்கிறார் ஆர்பி உதயகுமார்.

    அதுமட்டுமல்ல, தற்போது நடக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை "அரசியல் பிணிகள்" என்று குறிப்பிட்ட அவர், மக்கள் தரப்போகும் சாட்டையடித் தீர்ப்புதான் இவர்களின் குதிரைபேர மற்றும் துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கறாராக கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனாவை பெயர் சொல்லியே பகிரங்கமாக விமர்சித்துள்ளார் மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார்.. இது அரசியல் வட்டாரத்தில் இந்த விமர்சனம் இப்போது கவனம் பெற்றுள்ளது... இதன் தாக்கம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இதனால் எழுந்துள்ளது.

    English Summary

    Aadhav Arjuna Body Language? R P Udhayakumar Names Him Directly and Launches a Scathing Attack