அதிமுக மாஜிகளுக்கு அல்வா கொடுத்த விஜய்! எப்படி இருந்த நீங்க.. இப்படி ஆயிட்டீங்க! விளாசிய தள்ளிய மாஜி

  • மதுரை: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் ராஜாவாக இருந்தார்கள், தவெகவில் விஜய்யின் கூஜாவாக மாறி பரிதாபமாக உள்ளனர் எனவும், அதிமுகவில் போர் படைத் தளபதிகளாக இருந்தார்கள். தற்போது தவெகவில் போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தும் பதவிகளை வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய், நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து விட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் பேசிய ஆர்பி உதயகுமார்," லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் , நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை என லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ராஜாராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

    Advertisement

    காவிரி விவகாரத்திற்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் பயனில்லை என்று த.வெ.க அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தொகுதி வரையறை விவாதத்திற்கு எம்.பிகளே இல்லாத நீங்கள் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி அதில் தோல்வி அடைந்துள்ளீர்கள்.

    ஆர்.பி.உதயகுமார்

    பரபரப்பாக இந்த சூழ்நிலையிலே ஒரு நேற்றைய தினம் த.வெ‌.க கட்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது .திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ‌அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ராஜாவாக வலம் வந்த விராலிமலை விஜயபாஸ்கர்,கரூர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி கடம்பூர் ராஜு ,உடுமலை ராதாகிருஷ்ணன், எம் எஸ் ஆனந்தன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் த.வெ.கவில் கூஜாக்களாக மாறி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    விஜயபாஸ்கர்

    வெகுமானத்தை எதிர்பார்த்து போனவர்கள் இன்றைக்கு தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள். விராலிமலை விஜயபாஸ்கர் போன்றவர்களுக்கெல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறபோது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் ரோஜா மாலைகளையும் , பொன்னாடைகளையும் அணிவித்து கைகளில் வீரவால், செங்கோல் கொடுத்து இந்த நாட்டை ஆளவாக ராசா என்று மனதார வாழ்த்திய அந்த காட்சிகள் எல்லாம் நமக்கு நினைவுக்கு வருகிறது.

    தவெக

    அப்படி அழகு பார்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தள்ளி வைத்துவிட்டு, த.வெ.க.விற்கு சென்ற சென்ற நீங்கள் இப்போது அலங்கோலமாக மாறி இருக்கிறீர்களே. உங்களை ராசாவாக அழகு பார்த்த அண்ணா திமுகவை புறந்தள்ளிவிட்டு, இப்போது த.வெ.க வின் புறம்போக்காக தவிப்பதை பார்க்கிறபோது மனது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    Advertisement

    முதல்வர் விஜய்

    இன்றைக்கு சி..விஜயபாஸ்கர் , எம்.ஆர் ‌விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், சிவபதி, திருச்சி வளர்மதி ஆகியோர் ஆளுமை மிக்க பதவியை எதிர்பார்த்து காத்திருந்து, கடவுள் விஜய்யின் கருணை பார்வை ஒரு முறை நம் மீது பட்டு விடாத ,அதன் மூலம் நமக்கு சாப விமோசனம் கிடைத்து விடாதா? என்று தவமாய் தவமிருந்த அதிமுகவின் முன்னாள் போர்படை தளபதிகளுக்கு இப்போது த.வெ.கவில் என்ன பதவி கொடுத்துள்ளார்கள் என்றால், அந்தப் போர் படைத் தளபதிகள் இனிமே போருக்கு செல்லத் தேவையில்லை, போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தி வைக்கின்ற அலங்கார பதவிகளை வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய் .

    Advertisement

    திருநெல்வேலி அல்வா

    அப்புறம் என்ன அவங்களுக்கெல்லாம் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கொடுக்காவ முடியும், தவெக கட்சியிலே காலங்காலமாக கொள்கைக்காக வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் இன்றைக்கு விஜய் த.வெ.க கட்சியில் கொள்கை காக்குற பதவிகளை வழங்கி இருக்கிறார். கொள்கை மறந்தவர்களுக்கு, கோட்பாடுகளை மறந்தவர்களுக்கு லட்சியத்தை மறந்துவர்களுக்கு , குறிப்பாக நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து விட்டார் என்பது செய்தியாக உள்ளது. ஆகவே தான் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் எல்லோருக்கும் மரியாதை ,என்பதை தான் நேற்று த.வெ.ககட்சியின் அறிவிப்பாக உள்ளது" என கூறியுள்ளார்.

    English Summary

    Former AIADMK Minister RB Udhayakumar criticised Vijay and mocked ex-ministers who joined TVK over their new party positions.