பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து! விஜய்யின் ரீல்ஸ் ஆட்சி.. ரியலில் கிழியுது! அதிமுக மாஜி அட்டாக்!

  • மதுரை: முதல்வர் விஜய் மிஸ்டர் க்ளீன் ஆட்சி என்று உத்தரவாதம் தந்தார்.. ஆனால், தற்பொழுது 100 கோடி போதை பொருள் வழக்கில் தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிறது தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து,அரசு அமைந்திருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," தவெக ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதல்வர் விஜய். தற்போது 100 கோடி ரூபாய் போதைபொருள் கடத்தல் வழக்கில் தவெக கட்சியின் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    பூபாலனுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டறிந்திருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் வரை இந்த வலைப்பின்னல் பறந்து விரிந்திருப்பதை அறிந்து, அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம்.

    ஆர்பி உதயகுமார்

    இது மட்டுமா? இன்னும் தவெக அரசில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் கருத்து கூறும்போது, நீதியரசர் சஞ்சய் குமார், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார், தமிழகத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியதாக தவெகவினர் இணையதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

    Advertisement

    முதல்வர் ஜோசப் விஜய்

    முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரத்திலே பிரச்சாரம் செய்தபோது, அந்தக் கூட்டத்தில் அதை முன்மொழிந்து, தவெக அமைச்சர் அருண்ராஜ், உச்ச நீதிமன்றமே தமிழக அரசை பாராட்டி இருப்பதாக குறிப்பிட்டு பேசினார். இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் சம்பந்தமான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் சஞ்சய் குமார், உங்களின் முதல்வர் வேகமாக செயல்பட நினைக்கிறாரே, நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கேட்கிறீர்கள்? என்றுதான் நான் அன்றைக்கு சொன்னேன்.

    உச்சநீதிமன்றம்

    ஆனால் அதைத் திரித்து, முதல்வர் விஜயைப் புகழ்ந்ததாக தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களிலே வைரலாக்கி விட்டீர்கள். இந்த நிலையிலே செங்கோட்டையனின் தேர்தல் தொடர்பான வழக்கை நான் விசாரிப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்" என்று கூறி, அந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்..

    Advertisement

    நீதிபதி சஞ்சய் குமார்

    நீதி அரசர் சஞ்சய் குமார் தவெக அரசின் சமூக வலைதளங்களுடைய அந்தப் பதிவு, எப்படி உண்மையை அடித்தளமாக வைத்திருக்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்ற நீதியரசர் இந்த கருத்தே சான்றாக இருக்கிறது.அத்தனையும் பொய். உண்மை என்பது எதுவுமே இல்லை, சாத்தியம் என்பது எதுவுமே இல்லை. அதற்கான முயற்சி என்பதும் எதுவும் இல்லை. ஆக, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிற ஒரு தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து, இந்த அரசு அமைந்திருக்கிறது.

    கடும் அதிர்ச்சி

    இந்த சமூகத்தில என்ன மாதிரியான தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த சம்பவத்தை நாம் சாட்சியாக எடுத்துக்கொண்டாலும், இன்றைக்கு இவையெல்லாம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இப்போது இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகிறபோது, இப்போது மக்களுக்கு என்ன அச்சம் ஏற்படுகிறது

    Advertisement

    தவெக அரசு

    தவெக அரசு உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் கருத்தையே திரித்து, அதற்கு தலை வைத்து, கால் வைத்து, வால் வைத்து, கை வைத்து, நீங்கள் அந்த சமூக வலைதள பதவிகளை வெளியிட்ட அந்த குட்டு இப்போது உடைந்திருக்கிறது. ஆகவே, அதுபோன்ற ஒரு செயற்கையான போலியான இல்லாத விளம்பரங்களை தேடுவதை தள்ளி வைத்துவிட்டு, இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை ஒத்தி வைத்துவிட்டு, ரியலிலே களம் இறங்க முன்வரவேண்டும், இந்த தவெக அரசு என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

    ரீல்ஸ் ஆட்சி

    ரீல்ஸ் போடுங்கள், இன்ஸ்டாவிலே போடுங்கள், புகழை தேடுங்கள், யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை முதலீடாக வைத்து, நீங்கள் ரியலை பின்னுக்கு தள்ளிவிட்டால், மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    Advertisement

    இயற்கை பேரிடர்

    மிகப்பெரிய பேரிடராக வருகிறபோது, அதிலே நாம் களத்திலே நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதன்மையான கடமை அரசுக்கு இருக்கிறது. ஆகவே, ரீல்ஸால் ஆட்சிக்கு வந்தோம், ஆகவே இந்த பேரிடரை ரீல்ஸை முன்னிறுத்துவோம் என்று இல்லாமல், ரீல்ஸை தள்ளி வைத்துவிட்டு, ரியலாக களத்திலே தவெக அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என்கிற மக்கள் மீது இருக்கிற அக்கறையோடு சொல்லுகிறோம். நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என கூறினார்.

    English Summary

    Former minister R B Udhayakumar criticises Vijay's government over drug case arrests and alleged misrepresentation of a Supreme Court judge's remarks.