எல்லாத்துக்கும் சாரி கேட்கும் முதல்வர்..’ஜால்ரா’ மன்றமான சட்டமன்றம்! விடாமல் விஜய்யை அடிக்கும் மாஜி!

  • மதுரை: எடப்பாடி கூறுபவரே இந்தியாவின் பிரதமர், ராகுல், விஜய்யே மாயை தான் எனவும், மேகதாது, காவிரி, விலைவாசி உயர்வு என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலமைச்சர் வாய்திறக்க மாட்டார். ஸ்கிரிப்ட் இருந்தால் மட்டுமே வாய்திறப்பார் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும், தவெக ஆட்சியில் தமிழக சட்டமன்றம் தற்போது 'ஜால்ரா' மன்றமாக மாறிவிட்டது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சட்மன்ற கூட்டத் தொடரில் இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிகட்டு என பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மு.வி. கருப்பையா பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இதில் முன்னால் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னால் MLA ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டு குறித்து அவதூறாக பேசிய கருப்பையாவிற்கு கண்டனம் தெரிவித்தும், அதனை தட்டி கேட்காக தவெக முதல்வர் விஜய் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்லிகட்டு காளைகளுடன் வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    'சாரி' முதல்வர்

    பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்," உலகிற்கே இளைஞர்களின் போராட்டத்திற்கு அடையாளமாக அமைந்தது ஜல்லிக்கட்டு போராட்டம் . ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போது, அதற்கான தடைச் சட்டத்தையும், நிரந்தரச் சட்டத்தையும் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஜல்லிக்கட்டு போட்டியை யாராவது சீரழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்களா? இனிமேல் யாரும் இப்படிப் பேசக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

    Advertisement

    கலைஞர் கருணாநிதி

    எல்லாவற்றுக்கும் 'சாரி' கேட்கும் முதல்வராக உள்ளார். வனத்துறை அமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் பற்றி தவறாகப் பேசியபோது 'சாரி' கேட்ட முதலமைச்சர், மண்ணின் மைந்தர்களின் உயிரோடு கலந்த போட்டியை அவமதித்ததற்காக, இளைஞர்களை திசை திருப்பும் தலைமுறையை விரும்பும் முதலமைச்சர், தவெக சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். அவரது பேச்சால் தமிழினமே தலைகுனிந்து போய்விட்டது.

    ஜல்ரா மன்றம்

    மேகதாது, காவிரி, விலைவாசி உயர்வு என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலமைச்சர் வாய்திறக்க மாட்டார். ஸ்கிரிப்ட் இருந்தால் மட்டுமே வாய்திறப்பார். சட்டமன்றம் தற்போது 'ஜால்ரா மன்றமாக' மாறிவிட்டது. மக்களின் பிரச்சனைகளை எடுத்துவைக்கும் சூப்பர் ஸ்டாராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். மக்கள் பிரச்சனைகளை விரல்நுனியில் வைத்துக்கொண்டு, ஆதாரங்களுடன் பேசி, மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராகவும் கதாநாயகனாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

    Advertisement

    தமிழக முதல்வர்

    தமிழக முதல்வர் வசீகரத்தை வைத்துக் கொண்டு இனியும் மக்களை முதல்வர் ஏமாற்ற முடியாது. தமிழ்நாடு அரசு ரூ.20 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு வைத்திருக்கிறது. தமிழ்நாட்டைக் தாண்டி இந்தியாவின் பிரதமராகவும், அமெரிக்காவின் பிரதமராகவும் உயரப்போகிறோம் என்கிறார்கள். வெங்காய விலையைக் கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள், வெங்காயம் பிரதமராகப் போகிறாராம் என்று கூறுகிறார்கள். ஏதோ மக்கள் அசந்த நேரத்தில் விஜய் முதல்வராகிவிட்டார்.

    பிரதமர் வேட்பாளர்

    60 சதவீதம் பேர் விஜய்க்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரதமர் வேட்பாளர் விஜயா, ராகுலா என்ற சர்ச்சை இப்போதே ஆரம்பித்துவிட்டது. தவெகவினர் ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி காட்டுபவரே பிரதமராக வருவார். இந்த அரசு அற்ப ஆயுளில் முடிந்துவிடும். மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்." என்றார்.

    English Summary

    R B Udhayakumar criticized Vijay over Jallikattu remarks, calling the Tamil Nadu Assembly a “sycophancy forum” and accusing the CM of scripted responses.