தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!


  • மதுரை: அதிமுக பாதிப்புக்கு காரணமானவர்கள் திருத்தி கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்கள் தொண்டர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிய செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் தாயுள்ளத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் அருகே உள்ள திருப்​பனந்​தாள் வளை​யல்​காரத் தெரு​வைச் சேர்ந்​தவர் மகேந்​திரன். இவர் அதி​முக​வில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செய​லா​ள​ராக பொறுப்பு வகித்​தார். இவருக்கு முனீஸ்​வரி என்ற மனை​வி​யும், நித்யஸ்ரீ என்ற மகளும் உள்​ளனர். சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு, அதி​முக​ இரு அணியாகப் பிரிந்தது.

    Advertisement

    இதனால் மகேந்​திரன் சில நாட்​களாக மிக​வும் மன உளைச்​சலில் இருந்து வந்​தார். இந்த ​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு தனது வீட்​டின் அரு​கிலேயே தனது உடலில் பெட்​ரோல் ஊற்றி தீக்​குளித்து தற்​கொலை செய்து கொண்​டார். அது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மரியாதை செய்தார்.

    இவரது குடும்பத்தினருக்கு கட்​சித் தலைமை சார்​பில் ரூ.30 லட்​சம், தஞ்​சாவூர் கிழக்கு மாவட்ட அதி​முக சார்​பில் ரூ.25 லட்​ச​ம் என ரூ.55 லட்​சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி கட்​சி​யினர் யாரும் இதே​போன்ற சம்​பவங்​களில் ஈடுபட வேண்​டாம் என எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகிக்கு மதுரையில் செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுக மிகப்பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு காரணமானவர்கள் யாராலும் இருந்தாலும், அதனை உணர்ந்து திருத்தி கொள்ள வேண்டும்.

    அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தாயுள்ளத்தோடு நடந்து கொண்டார்களோ, அப்படி ஒவ்வொரு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். என்ன நோக்கத்திற்காக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK: Sellur Raju Demands AIADMK Leaders should Correct Mistakes and Value Grassroot Workers